இந்திய அரசியலமைப்பு
ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதைப் பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும்.
அரசியலமைப்பு உருவாக்கம்
- 1946ஆம் ஆண்டு அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது.
- சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9ஆம் நாள் நடைபெற்றது.
- தற்காலிக தலைவர்: டாக்டர் சச்சிதானந்த சின்ஹா.
- நிரந்தர தலைவர்: டாக்டர் இராஜேந்திர பிரசாத்.
- துணைத் தலைவர்கள்: H.C. முகர்ஜி, V.T. கிருஷ்ணமாச்சாரி.
- வரைவுக் குழுத் தலைவர்: டாக்டர் B.R. அம்பேத்கர் – "இந்திய அரசியலமைப்பின் தந்தை" என அறியப்படுகிறார்.
- 11 அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது. 2473 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
- 1949 நவம்பர் 26இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1950 ஜனவரி 26இல் நடைமுறைக்கு வந்தது.
அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்
- உலகிலுள்ள எழுதப்பட்ட அரசியலமைப்புகளிலேயே மிகவும் நீளமானது.
- 22 பொகங்கள், 395 சட்டப்பிரிவுகள், 8 அட்டவணைகள் கொண்டது (தொடக்கத்தில்).
- நெகிழா தன்மை மற்றும் நெகிழும் தன்மை இரண்டும் கொண்டது.
- கூட்டாட்சி முறை அரசாங்கத்தை ஏற்படுத்துகிறது.
- சமயச்சார்பற்ற நாடாக அறிவிக்கிறது.
- சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
- 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை.
முகவுரை (Preamble)
"இந்திய மக்களாகிய நாம்" என்ற சொற்களுடன் தொடங்குகிறது. 1976ஆம் ஆண்டு 42ஆவது திருத்தத்தின்படி சமதரமம், சமயச்சார்பின்மை, ஒருமைப்பாடு ஆகிய மூன்று புதிய சொற்கள் சேர்க்கப்பட்டன. முகவுரை "அரசியலமைப்பின் திறவுகோல்" என குறிப்பிடப்படுகிறது.
அடிப்படை உரிமைகள் (பகுதி III, பிரிவு 12-35)
| உரிமை | விளக்கம் |
|---|---|
| I. சமத்துவ உரிமை (பிரிவு 14-18) | சட்டத்தின் முன் அனைவரும் சமம். தீண்டாமை ஒழிப்பு (பிரிவு 17). |
| II. சுதந்திர உரிமை (பிரிவு 19-22) | பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை, தொழில் செய்யும் உரிமை. |
| III. சுரண்டலுக்கு எதிரான உரிமை (பிரிவு 23-24) | கட்டாய வேலை, கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் தடை. |
| IV. சமயச்சார்பு உரிமை (பிரிவு 25-28) | எந்த சமயத்தையும் ஏற்கவும், பின்பற்றவும் உரிமை. |
| V. கல்வி, கலாச்சார உரிமை (பிரிவு 29-30) | சிறுபான்மையினரின் மொழி, கலாச்சார பாதுகாப்பு. |
| VI. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை (பிரிவு 32) | நீதிமன்றத்தை அணுகி உரிமை பெறுதல். |
நீதிப்பேராணைகள் (Writs)
| பேராணை | விளக்கம் |
|---|---|
| ஆட்கொணர்வு (Habeas Corpus) | சட்டத்திற்குப் புறம்பான கைது தடுப்பு |
| கட்டளையுறுத்தும் (Mandamus) | சட்ட உதவியுடன் பணியிடம் சம்பந்தப்பட்ட நிறைவேற்றல் |
| தடையுறுத்தும் (Prohibition) | கீழ்நீதிமன்றம் சட்ட எல்லையைத் தாண்டுவதை தடுத்தல் |
| ஆவணக் கோரிக்கை (Certiorari) | உயர்நீதிமன்றம் கீழ்நீதிமன்ற ஆணைகளை மறுபரிசீலனை செய்தல் |
| தகுதிமேல் வினவும் (Quo-Warranto) | தகாத முறையில் அலுவலகம் கைப்பற்றுவதை தடை செய்தல் |
அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் (பகுதி IV, பிரிவு 36-51)
இவை நீதிமன்றத்தால் நடைமுறைப்படுத்த இயலாதவை. ஆனால் நாட்டின் நிர்வாகத்திற்கு அடிப்படையானவை. சமூக நலன், பொருளாதார நீதி, சர்வதேச அமைதி போன்ற கொள்கைகளை உள்ளடக்கியது.
அடிப்படைக் கடமைகள் (பிரிவு 51A)
1976ஆம் ஆண்டு 42ஆவது திருத்தத்தின்படி, சுவரன் சிங் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 10 அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டன. 2002இல் 86ஆவது திருத்தத்தின்படி 11ஆவது கடமை சேர்க்கப்பட்டது.
அவசரநிலை
| வகை | பிரிவு | விளக்கம் |
|---|---|---|
| தேசிய அவசரநிலை | 352 | போர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, ஆயுதக் கிளர்ச்சி |
| மாநில அவசரநிலை (குடியரசுத் தலைவர் ஆட்சி) | 356 | மாநில அரசு அரசியலமைப்புப்படி நடக்கத் தவறும்போது |
| நிதி அவசரநிலை | 360 | நாட்டின் நிதி நிலைமை ஆபத்தில் இருக்கும்போது |