இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டில் வசிக்கின்ற மொத்த மக்களின் எண்ணிக்கையே ஒரு நாட்டின் மக்கள் தொகை எனப்படுகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
- இந்தியாவின் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1872ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
- முழுமையான முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1881ஆம் ஆண்டு நடைபெற்றது.
- நாட்டின் 15ஆவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டு நடைபெற்றது.
- கணக்கெடுப்பு பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்
உலக மக்கள் தொகையில் இந்தியா சுமார் 17.5 சதவிகிதம் கொண்டுள்ளது. ஆனால் உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவிகிதமே கொண்டுள்ளது.
| குறிப்பு | விவரம் (2011 கணக்கெடுப்பு) |
|---|---|
| மொத்த மக்கள் தொகை | 121 கோடி |
| மக்கள் தொகை அடர்த்தி | ஒரு சதுர கி.மீக்கு 382 நபர்கள் |
| பாலின விகிதம் | 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் |
| கல்வியறிவு விகிதம் | 74.04% |
போக்குவரத்து
அ) சாலைப் போக்குவரத்து
- தங்க நாற்கரச் சாலை: டெல்லி – மும்பை – சென்னை – கொல்கத்தா இணைக்கும் 5846 கி.மீ நீளமான சாலை.
- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 1988இல் நிறுவப்பட்டது.
- எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (BRO) 1960இல் நிறுவப்பட்டது.
ஆ) இரயில் போக்குவரத்து
இந்திய இரயில்வே ஆசியாவிலேயே மிகப்பெரிய இரயில்வே அமைப்பு ஆகும். 17 இரயில்வே மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கொங்கண் இரயில்வே 1998இல் தொடங்கப்பட்டது.
இ) நீர்வழிப் போக்குவரத்து
மும்பை இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம். மற்ற முக்கிய துறைமுகங்கள்: சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டினம், கொச்சி, காண்ட்லா.
ஈ) வான்வழிப் போக்குவரத்து
எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்குப் பயன்படும் போக்குவரத்து. ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், வாயுதூத், பவன்ஹான்ஸ் (ஹெலிகாப்டர்) முக்கிய சேவைகள்.
தகவல் தொடர்பு
- தனி நபர் தகவல் தொடர்பு: தொலைபேசி, கைபேசி, இணையதளம்
- பொதுத் தகவல் தொடர்பு: அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள்
- அகில இந்திய வானொலி 1936இல் தொடங்கப்பட்டு, 1957இல் 'ஆகாச வாணி' எனப் பெயர் மாற்றப்பட்டது.
- தொலைக்காட்சி வலையமைப்பு 'தூர்தர்ஷன்' என அழைக்கப்படுகிறது.
செயற்கைக்கோள் தகவல் தொடர்பு
இன்சாட் (INSAT) தொலைத்தொடர்பு, வானிலை ஆய்வு பல்நோக்கு திட்டம். IRS (இந்திய தொலையுணர்வு செயற்கைக்கோள் அமைப்பு) தொலையுணர்வுக்கானது. இன்சாட் 1B ஆகஸ்ட் 30, 1983இல் ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள்.
வணிகம்
| வகை | விளக்கம் |
|---|---|
| உள்நாட்டு வணிகம் | ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம். நிலவழி போக்குவரத்து முக்கிய பங்கு. |
| பன்னாட்டு வணிகம் | இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம். |
| இருதரப்பு வணிகம் | இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம். |
| பல்தரப்பு வணிகம் | இரண்டிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம். |