திருக்குறள்
திருக்குறள் திருவள்ளுவர் இயற்றிய உலகப் பொதுமறை. 1330 குறட்பாக்களை கொண்ட இந்நூல் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது.
திருக்குறளின் அமைப்பு
- அறத்துப்பால் - 380 குறள்கள் (38 அதிகாரங்கள்)
- பொருட்பால் - 700 குறள்கள் (70 அதிகாரங்கள்)
- காமத்துப்பால் - 250 குறள்கள் (25 அதிகாரங்கள்)
- மொத்தம் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள்
திருக்குறள் - விவரம்
| பால் | குறள் எண்ணிக்கை | அதிகாரங்கள் |
|---|---|---|
| அறத்துப்பால் | 380 | 38 |
| பொருட்பால் | 700 | 70 |
| காமத்துப்பால் | 250 | 25 |
| மொத்தம் | 1330 | 133 |
திருக்குறளின் சிறப்பு
திருக்குறள் 'உலகப் பொதுமறை' என அழைக்கப்படுகிறது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் 'தெய்வப் புலவர்' என போற்றப்படுகிறார்.