காட்சித் தொடர்பு (Visual Communication)
கணினியில் கோப்பு (File) மற்றும் கோப்புத் தொகுப்பு (Folder) ஆகியவற்றை உருவாக்குதல், நிர்வகித்தல் மற்றும் மென்பொருள்கள் வழியாக அசைவூட்டம் (Animation) உருவாக்குதல் பற்றிய பாடம்.
கோப்பு (File)
கணினியில் இடம் பெற்றிருக்கும் மென்பொருள் மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் 'கோப்பு' எனறு அழைக்கப்படும். நாம் பயன்படுத்தும் மென்பொருளின் தன்மையைக் கொண்டே கோப்பின் தன்மை அமையும்.
- Word Document - உரை கோப்பு
- Paint - படக் கோப்பு
- NotePad - குறிப்புக் கோப்பு
கோப்புத் தொகுப்பு (Folder)
கோப்புத் தொகுப்பு என்பது பல கோப்புகளை உள்ளடக்கிய பெட்டகம் போன்றது. இவற்றைத் தேவைக்கேற்ப பெயரால் உருவாக்கிக் கொள்ள முடியும்.
கோப்பு நீட்டிப்புகள் (File Extensions)
| நீட்டிப்பு | கோப்பு வகை |
|---|---|
| .txt | உரை கோப்பு (Text File) |
| .doc / .docx | Word ஆவணம் |
| .jpg / .png | படக் கோப்பு (Image File) |
| .mp3 | ஒலிக் கோப்பு (Audio File) |
| .mp4 | காணொளிக் கோப்பு (Video File) |
| PDF ஆவணம் |
அசைவூட்டம் (Animation)
அசைவூட்டம் என்பது நிலையான படங்களைத் தொடர்ச்சியாக வேகமாகக் காட்டுவதன் மூலம் இயக்கத் தோற்றத்தை ஏற்படுத்துவது ஆகும். இது சட்டகம் (Frame) அடிப்படையில் செயல்படுகிறது.
- சட்டகம் (Frame): அசைவூட்டத்தின் அடிப்படை அலகு
- சட்ட வீதம் (Frame Rate): ஒரு நொடியில் காட்டப்படும் சட்டங்களின் எண்ணிக்கை (fps)
- முக்கிய சட்டகம் (Key Frame): அசைவூட்டத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழும் சட்டகம்
அசைவூட்டத்தின் வகைகள்
- 2D அசைவூட்டம்: இரு பரிமாண அசைவூட்டம் (நீளம், அகலம்)
- 3D அசைவூட்டம்: முப்பரிமாண அசைவூட்டம் (நீளம், அகலம், உயரம்)
- நிறுத்தி இயக்கம் (Stop Motion): பொருட்களை சிறிது சிறிதாக நகர்த்தி புகைப்படம் எடுத்து அசைவூட்டம் செய்தல்
Scratch மென்பொருள்
Scratch என்பது MIT நிறுவனம் உருவாக்கிய இலவச நிரலாக்க மென்பொருள். இதில் கட்டளைத் தொகுதிகளை (Blocks) இழுத்து வைத்து எளிதாக அசைவூட்டம் மற்றும் விளையாட்டுகளை உருவாக்கலாம்.
- Sprite - அசைவூட்டத்தில் பயன்படுத்தப்படும் உரு
- Stage - அசைவூட்டம் நிகழும் மேடை
- Script - கட்டளைகளின் தொகுப்பு