வேதிவினைகளின் வகைகள்
ஒரு வேதிவினையில் பழைய பிணைப்புகள் உடைந்து புதிய வேதிப்பிணைப்புகள் உருவாகின்றன. வேதிவினைகள் அணுக்களின் மறுசீரமைப்பு தன்மையைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன.
அ) சேர்க்கை அல்லது கூடுகை வினைகள்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருள்கள் இணைந்து ஒரு சேர்மம் உருவாகும் வினை.
- தனிமம் + தனிமம் → சேர்மம்: S(s) + O₂(g) → SO₂(g)
- தனிமம் + சேர்மம் → சேர்மம்: PCl₃ + Cl₂ → PCl₅
- சேர்மம் + சேர்மம் → சேர்மம்: SiO₂ + CaO → CaSiO₃
பெரும்பாலான சேர்க்கை வினைகள் வெப்ப உமிழ் வினைகள் ஆகும்.
ஆ) சிதைவு வினைகள்
ஒரு சேர்மம் சிதைவுற்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய மூலக்கூறுகளாக மாறும் வினை. இது சேர்க்கை வினைக்கு எதிர்வினை ஆகும்.
- வெப்பச் சிதைவு: CaCO₃ → CaO + CO₂
- மின்சிதைவு: 2NaCl → 2Na + Cl₂
- ஒளிச்சிதைவு: 2AgBr → 2Ag + Br₂
இ) இடப்பெயர்ச்சி வினைகள்
அதிக வினைத்திறன் கொண்ட தனிமம் குறைந்த வினைத்திறன் கொண்ட தனிமத்தை அதன் சேர்மத்திலிருந்து இடம்பெயரச் செய்யும் வினை.
Fe + CuSO₄ → FeSO₄ + Cu
ஈ) இரட்டை இடப்பெயர்ச்சி வினைகள்
இரண்டு சேர்மங்களின் அயனிகள் பரிமாற்றம் செய்யப்பட்டு இரண்டு புதிய சேர்மங்கள் உருவாகும் வினை.
NaCl(aq) + AgNO₃(aq) → AgCl(s)↓ + NaNO₃(aq)
உ) ஆக்சிஜனேற்றம் - ஒடுக்கம் (ரெடாக்ஸ்) வினைகள்
- ஆக்சிஜனேற்றம்: ஒரு பொருள் ஆக்சிஜனை ஏற்றல் அல்லது ஹைட்ரஜனை இழத்தல் அல்லது எலக்ட்ரான்களை இழத்தல்
- ஒடுக்கம்: ஒரு பொருள் ஆக்சிஜனை இழத்தல் அல்லது ஹைட்ரஜனை ஏற்றல் அல்லது எலக்ட்ரான்களை ஏற்றல்
வினை வேகத்தை பாதிக்கும் காரணிகள்
- செறிவு
- வெப்பநிலை
- வினையூக்கி
- பரப்பளவு