அணுக்களும் மூலக்கூறுகளும்
நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. ஜான் டால்டன் அணுவைப் பற்றிய முதல் அறிவியல் கோட்பாட்டினை வெளியிட்டார்.
நவீன அணுக்கொள்கை
- அணு என்பது பிளக்கக்கூடிய துகள் (எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான்)
- ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணு நிறைகளைப் பெறலாம் (ஐசோடோப்புகள்)
- ஒரு அணுவின் நிறையிலிருந்து அதன் ஆற்றலைக் கணக்கிட முடியும் (E = mc²)
அணு நிறை
ஒப்பு அணுநிறை என்பது C-12 அணு நிறையின் 1/12 பங்கை அலகாகக் கொண்டு கணக்கிடப்படும் விகிதம். கிராமில் குறிப்பிடுவதாகக் கொண்டால் "கிராம் அணுநிறை" எனப்படும்.
| தனிமம் | கிராம் அணுநிறை |
|---|---|
| ஹைட்ரஜன் | 1 கி |
| கார்பன் | 12 கி |
| நைட்ரஜன் | 14 கி |
| ஆக்சிஜன் | 16 கி |
சராசரி அணு நிறை (AAM)
தனிமங்கள் இயற்கையில் பல ஐசோடோப்புகளின் கலவையாக உள்ளன. சராசரி அணு நிறை = ஒவ்வொரு ஐசோடோப்பின் நிறை × சதவீத பரவல் ஆகியவற்றின் கூட்டுத்தொகை.
மூலக்கூறு மற்றும் மூலக்கூறு நிறை
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் வலுவான பிணைப்பால் இணைந்தே காணப்படும் - இதற்கு மூலக்கூறு என்று பெயர்.
- ஒத்த ஈரணு மூலக்கூறு: H₂, O₂, N₂
- வேற்று ஈரணு மூலக்கூறு: HCl
- வேற்று மூவணு மூலக்கூறு: H₂O
மோல் கருத்துரு
ஒரு மோல் என்பது 6.023 × 10²³ துகள்களைக் குறிக்கும் (அவகாட்ரோ எண்). திட்ட வெப்ப அழுத்த நிலையில் (STP) ஒரு மோல் வாயு 22.4 லிட்டர் பருமனை ஆக்கிரமிக்கும்.
| சூத்திரம் | விளக்கம் |
|---|---|
| மோல் = நிறை / அணுநிறை | அணுக்களுக்கு |
| மோல் = நிறை / மூலக்கூறுநிறை | மூலக்கூறுகளுக்கு |
| மோல் = துகள்கள் / 6.023×10²³ | எண்ணிக்கையிலிருந்து |
அவகாட்ரோ விதி
சம வெப்பநிலை மற்றும் சம அழுத்தத்தில் சம பருமனுள்ள அனைத்து வாயுக்களும் சம எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைப் பெற்றிருக்கும். V ∝ n.
சதவீத இயைபு
ஒரு சேர்மத்தில் உள்ள ஒவ்வொரு தனிமத்தின் நிறைச் சதவீதம் = (தனிமத்தின் மொத்த நிறை / சேர்மத்தின் மூலக்கூறு நிறை) × 100.