ஒளியியல் (Optics)
10ஆம் வகுப்பு அறிவியல் - அலகு 2
ஒளி என்பது ஒரு வகை ஆற்றல். இது அலைவடிவில் பரவுகிறது. ஒளி செல்லும் பாதை 'ஒளிக்கதிர்' என்றும் ஒளிக்கதிர்களின் தொகுப்பு 'ஒளிக்கற்றை' என்றும் அழைக்கப்படுகிறது.
ஒளியின் பண்புகள்
- ஒளி என்பது ஒரு வகை ஆற்றல்
- ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது
- ஒளி பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை
- காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C = 3 × 10⁸ மீ வி⁻¹
- ஒளி அலைவடிவில் செல்வதால் அலைநீளம் (λ) மற்றும் அதிர்வெண் (ν) பண்புகளைப் பெற்றிருக்கும். C = νλ
ஒளிவிலகல் விதிகள்
ஸ்நெல் விதி: படுகதிர், விலகுகதிர் மற்றும் செங்குத்து ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமையும். படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் விலகுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் உள்ள விகிதம் மாறிலி.
sin i / sin r = n (ஒளிவிலகல் எண்)
குவிலென்சு (Convex Lens)
| பொருளின் இடம் | பிம்பத்தின் தன்மை |
|---|---|
| முடிவிலியில் | குவியத்தில் மெய், தலைகீழ், மிகச்சிறிய புள்ளி |
| 2F க்கு அப்பால் | F மற்றும் 2F இடையே, மெய், தலைகீழ், சிறியது |
| 2F இல் | 2F இல், மெய், தலைகீழ், சம அளவு |
| F மற்றும் 2F இடையே | 2F க்கு அப்பால், மெய், தலைகீழ், பெரியது |
| குவியத்தில் (F) | முடிவிலியில், மெய், தலைகீழ், மிகப்பெரியது |
| F க்கு உள்ளே | லென்சின் அதே பக்கம், மாய, நேரான, பெரியது |
லென்சு சமன்பாடு
1/v - 1/u = 1/f
உருப்பெருக்கம் m = v/u = பிம்ப உயரம் / பொருள் உயரம்
லென்சின் திறன் (Power of a Lens)
P = 1/f (f மீட்டரில்). அலகு: டையாப்டர் (D)
- குவிலென்சின் திறன் நேர்க்குறி (+)
- குழிலென்சின் திறன் எதிர்க்குறி (-)
முழு அக எதிரொளிப்பு (Total Internal Reflection)
ஒளி அடர் ஊடகத்திலிருந்து அரிதான ஊடகத்திற்கு செல்லும்போது, படுகோணம் ஒரு குறிப்பிட்ட மதிப்பை (நிபந்தனைக் கோணம்) விட அதிகமாக இருந்தால் ஒளி முழுவதும் எதிரொளிக்கப்படுகிறது.
மனிதக் கண் மற்றும் ஒளியியல் கருவிகள்
- கண்ணின் லென்சு ஒரு குவிலென்சு
- நுண்ணோக்கி: நுண்ணிய பொருட்களைப் பெரிதாகக் காண பயன்படுகிறது
- தொலைநோக்கி: தொலைவில் உள்ள பொருட்களைக் காண பயன்படுகிறது