இயக்க விதிகள் (Laws of Motion)
10ஆம் வகுப்பு அறிவியல் - அலகு 1
விசை என்பது 'தள்ளுதல்' அல்லது 'இழுத்தல்' என்ற புறச்செயல் வடிவம் ஆகும். சர் ஐசக் நியூட்டனின் மூன்று இயக்க விதிகள் மூலம் பொருளின் இயக்கத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும்.
நிலைமம் (Inertia)
- ஓய்வில் நிலைமம்: ஓய்வு நிலையில் உள்ள பொருள் தமது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு
- இயக்கத்தில் நிலைமம்: இயக்க நிலையில் உள்ள பொருள் தமது இயக்க நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு
- திசையில் நிலைமம்: இயங்கும் திசையிலிருந்து மாறாது, திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு
நியூட்டனின் முதல் விதி
ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
உந்தம் (Momentum)
உந்தம் (p) = நிறை (m) × திசைவேகம் (v). SI அலகு: கிகி மீவி-1
நியூட்டனின் இரண்டாம் விதி
ஒரு பொருளின் உந்த மாற்ற வீதம், அப்பொருளின் மீது செயல்படும் விசைக்கு நேர்விகிதத்தில் அமையும்.
F = m × a (விசை = நிறை × முடுக்கம்)
| அலகு முறை | விசையின் அலகு |
|---|---|
| SI | நியூட்டன் (N) = கிகி மீ வி-2 |
| CGS | டைன் = கி செ.மீ வி-2 |
நியூட்டனின் மூன்றாம் விதி
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு. விசையும் எதிர்விசையும் எப்போதும் இரு வேறு பொருள்கள் மீது செயல்படும்.
கணத்தாக்கு விசை (Impulse)
கணத்தாக்கு J = F × t = Δp (உந்த மாற்றம்). அலகு: கிகி மீவி-1 அல்லது நியூட்டன் விநாடி
நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி
புறவிசை ஏதும் செயல்படாத வரையில், ஒரு தொகுப்பின் மொத்த உந்தம் மாறாது: m₁u₁ + m₂u₂ = m₁v₁ + m₂v₂
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
அண்டத்தில் உள்ள பொருட்களின் ஒவ்வோர் துகளும் பிற துகளை ஒரு குறிப்பிட்ட விசை மதிப்பில் ஈர்க்கிறது. F = G × m₁m₂/d²
G = 6.674 × 10-11 N m² kg-2 (ஈர்ப்பியல் மாறிலி)
புவி ஈர்ப்பு முடுக்கம் (g)
| இடம் | g மதிப்பு |
|---|---|
| புவி மேற்பரப்பு | 9.8 மீ வி-2 |
| உயரம் அதிகரிக்க | g குறையும் |
| ஆழம் அதிகரிக்க | g குறையும் |
| புவி மையத்தில் | g = 0 |