மனிதர்கள் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவம் போன்ற தங்கள் வாழ்வியல் தேவைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்துள்ளனர். மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் தாவரங்களின் பொருளாதாரப் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு பொருளாதாரத் தாவரவியல் எனப்படுகிறது.
5.1 உணவுத் தாவரங்கள்
மனிதர்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாகத் தாவரங்கள் விளங்குகின்றன. நாம் தாவரத்தின் பல்வேறு பாகங்களான வேர், தண்டு, இலை, விதை, காய் மற்றும் கனிகளை உணவாக உட்கொள்கிறோம்.
| உணவு வகை | தாவர பாகம் | எடுத்துக்காட்டுகள் |
|---|---|---|
| காய்கறிகள் | வேர் | பீட்ரூட், கேரட் |
| காய்கறிகள் | தண்டுகள் | கரும்பு, உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு |
| காய்கறிகள் | இலைகள் | கீரைகள், கறிவேப்பிலை |
| தானியங்கள் | விதை | நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு, திணை |
| பருப்பு வகைகள் | விதை | கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு |
| கனிகள் | பழங்கள் | நெல்லி, கொய்யா |
உலகளவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண் நிறுவன அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ஆம் நாளை உலக உணவு தினமாகக் கொண்டாடுகிறது.
5.2 நறுமணத் தாவரங்கள்
வேப்பமண்டலத் தாவரங்களிலிருந்து பெறப்படும் நறுமணப் பொருள்கள் உணவிற்கு நறுமணமூட்டப் பயன்படுகின்றன. தாவரங்களின் மரப்பட்டைகள், வேர்கள், இலைகள், மலர்கள் அல்லது தண்டுகள் போன்றவற்றிலிருந்து பெறப்படும் நறுமணப் பொருள்கள் உணவிற்கு சுவையூட்டவும், நிறமூட்டியாகவும், உணவுப் பொருள்களைப் பாதுகாக்கவும் பயன்படுகின்றன.
| நறுமணப் பொருள் | தாவர பாகம் |
|---|---|
| ஏலக்காய் | விதை / காய் |
| மிளகு | கனி |
| கறிவேப்பிலை | இலை |
| வெந்தயம் | விதை |
| சீரகம் | விதை |
| மஞ்சள் | தண்டு (கிழங்கு) |
| கிராம்பு | மலர் மொட்டு |
| இஞ்சி | தண்டு (கிழங்கு) |
| இலவங்கப்பட்டை | மரப்பட்டை |
5.3 மருத்துவத் தாவரங்கள்
நம்மைச் சுற்றிக் காணப்படும் தாவரங்களில் சில தாவரங்கள் நமது நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன. இவற்றை நாம் மருத்துவத் தாவரங்கள் என அழைக்கிறோம். புண், வெட்டுக் காயம், சளி, காய்ச்சல் போன்ற நோய்களை இவை குணப்படுத்துகின்றன.
| தாவரம் | பயன்படும் பாகம் | மருத்துவப் பயன்கள் |
|---|---|---|
| நெல்லி | கனி | வைட்டமின் "சி" சத்து குறைவால் வரும் ஸ்கர்வி நோய்க்கு மருந்தாக, நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த |
| துளசி | இலை, விதை | இருமல், சளி, மார்புச் சளி மற்றும் மூச்சுக் குழாய் அழற்சியைக் குணப்படுத்த |
| சோற்றுக் கற்றாழை | இலைகள் | மலமிளக்கியாக, காயத்தைக் குணப்படுத்த, தோல் எரிச்சல் மற்றும் குலைப் புண்ணைக் குணப்படுத்த |
| வேம்பு | மரப்பட்டை, இலை, விதை | கிருமி நாசினியாக, நோய்களுக்கு மருந்தாக |
| மஞ்சள் | தகர (கீழ்) தண்டு | கிருமி நாசினி, சிறிய காயம்பட்ட இடங்களில் தொற்று ஏற்படாமல் தடுக்க |
5.4 நாரத் தாவரங்கள்
எந்த தாவரங்களிலிருந்து நமக்குத் தேவையான நாரகள் பெறப்படுகின்றனவோ, அவை நார் தரும் தாவரங்கள் என முறையே அழைக்கப்படுகின்றன. இவை நூல், கயிறு, துணி மற்றும் காகிதம் போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன.
| நார் வகை | தாவர பாகம் | எடுத்துக்காட்டுகள் |
|---|---|---|
| நெசவு நாரகள் | விதைகளின் மேற்புறத்தூவி | பருத்தி |
| நெசவு நாரகள் | தண்டு அல்லது தண்டிடை நாரகள் | ஆளி, சணல் |
| இலை நாரகள் | இலை | கற்றாழை |
| உரிமட்டை நாரகள் | தேங்காய் உரிமட்டை | தேங்காய் |
| நிரப்பும் நாரகள் | விதை / கனி | இலவம் பஞ்சு |
5.5 மரக்கட்டை தரும் தாவரங்கள்
வீடு கட்டுவதற்கும், மரப்பொருள்கள் தயாரிப்பதற்குமான மரக்கட்டைகள் தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றன. மரக்கட்டைகளின் நீடித்த தன்மை, அழகு மற்றும் வெப்பத்தைத் தாங்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு பயன்பாடுகளுக்கு நாம் மரக்கட்டைகளைப் பயன்படுத்துகிறோம்.
| மரக்கட்டை வகை | பண்புகள் | பயன்பாடுகள் |
|---|---|---|
| வன்கட்டைகள் | கடினமானவை, நிலவாழ் பூக்கும் தாவரங்களிலிருந்து (ஆஞ்சியோஸ்பெர்ம்) பெறப்படும் | உயர்தர மரச்சாமான்கள், நாற்காலிகள், மேற்கூரைகள், மரக்கட்டுமானங்கள் |
| மென்கட்டைகள் | மென்மையானவை, நடுத்தர அகரத்தி கொண்டவை | மரப்பெட்டிகள், பலகைகள், தாள்கள் தயாரிக்க (எ.கா. கடம்பு, பெண்) |
மரக்கட்டைகளிலிருந்து மெல்லியதாகச் சீவி எடுக்கப்படுகின்ற மரத்தகடுகளை உரிய வகையில் ஒன்றின் மேலொன்றாக அடுக்கடுக்காக ஒட்டி உருவாக்கப்படுவதே ஒட்டுப்பலகை (Ply wood) ஆகும்.
5.6 அலங்காரத் தாவரங்கள்
அழகியல் காரணங்களுக்காக வணிகரீதியாகப் பயன்படும் வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்காரத் தாவரங்கள் எனப்படுகின்றன. மலர் தரும் தாவரங்களை வளர்க்கும் மலர்வளர்ப்பு தோட்டக்கலையின் முக்கியப் பிரிவாக இருக்கிறது.
எடுத்துக்காட்டுகள்: மல்லிகை, ராஜா, செவ்வந்தி, கார்னேஷன், ஜெரபரா, செம்பருத்தி, நந்தியாவட்டை, முல்லை, காகிதப்பூ, சரக்கொன்றை, மந்தாரை.
5.7 தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான உறவுமுறை
விலங்குகள் தனது உணவு, வசிப்பிடம் உள்ளிட்ட தேவைகளுக்குத் தாவரங்களைச் சார்ந்திருக்கின்றன. இந்தத் தொடர்பினால் விலங்குகள் மட்டுமின்றித் தாவரங்களும் பயனடைகின்றன.
| விலங்கு / உயிரினம் | தாவரத்துடனான தொடர்பு | பொருளாதார முக்கியத்துவம் |
|---|---|---|
| பட்டுப்புழுக்கள் | மல்பெரி இலையை உணவாக எடுத்துக்கொண்டு மல்பெரி தாவரத்தில் வசிக்கின்றன | பட்டு உற்பத்திக்குப் பயன்படுகிறது |
| தேனீக்கள் | அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன | தேன் உற்பத்தி; காய்கறிகள் மற்றும் பழங்கள் உருவாக உதவுகின்றன |
| பறவைகள் (ஓசனிச்சிட்டு) | அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன; விதைகளைப் பரப்புகின்றன | தாவர இனப்பெருக்கம் |
| மண்புழுக்கள் | மண்ணில் உள்ள கரிமப் பொருட்களை சிதைக்கின்றன | மண் வளத்தை அதிகரிக்கின்றன |
5.8 தாவரங்களின் பிற பயன்பாடுகள்
| பயன்பாடு | விவரம் | எடுத்துக்காட்டுகள் |
|---|---|---|
| மண் வளத்தைப் பாதுகாத்தல் | தாவர இலைகள், மலர்கள் மண்ணில் உதிர்ந்து மட்கிய உரமாகி மண் வளத்தை அதிகரிக்கின்றன. நீலப்பச்சைப் பாசி, பாக்டீரியா, சூயுடோமோனாஸ் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்துகின்றன | நீலப்பச்சைப் பாசி, ரைசோபியம் |
| மண் அரிப்பைத் தடுத்தல் | தாவரங்கள் மண்ணை அரிப்பிலிருந்து காக்கின்றன | புல்வெளி தாவரங்கள் |
| ரப்பர் மற்றும் இயற்கை நெகிழிகள் | ரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பாலிலிருந்து ரப்பர் தயாரிக்கப்படுகிறது | வாகனச் சக்கரங்கள், மின்கம்பிகள், இருக்கைகள் |
| உயிரி எரிபொருள் | தாவரக் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது | கரும்பு ஆலைக் கழிவுகள், காட்டாமணக்கு |
சுருக்கம்
- மனிதர்கள் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் ஆகிய அனைத்து தேவைகளுக்கும் தாவரங்களைச் சார்ந்துள்ளனர்.
- மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயான தொடர்பை ஆய்வு செய்யும் அறிவியல் பிரிவு பொருளாதாரத் தாவரவியல் எனப்படுகிறது.
- உணவுத் தாவரங்கள் காய்கறிகள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
- நறுமணப் பொருள்கள் தாவரங்களின் மரப்பட்டை, வேர், இலை, மலர், தண்டு ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றன.
- மருத்துவத் தாவரங்கள் நெல்லி, துளசி, கற்றாழை, வேம்பு, மஞ்சள் போன்றவை பல நோய்களைக் குணப்படுத்துகின்றன.
- நார் தரும் தாவரங்களிலிருந்து நெசவு நார், கயிறு நார் மற்றும் நிரப்பும் நார்கள் பெறப்படுகின்றன. பருத்தி முக்கிய நெசவு நாரத் தாவரம்.
- மரக்கட்டைகள் வன்கட்டைகள் மற்றும் மென்கட்டைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
- அலங்காரத் தாவரங்கள் அழகியல் காரணங்களுக்காக வளர்க்கப்படுகின்றன; மலர்வளர்ப்பு முக்கியமான தோட்டக்கலையாகும்.
- தேனீக்கள் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவி, தேன் வழங்குகின்றன; பட்டுப்புழுக்கள் பட்டு உற்பத்திக்கு உதவுகின்றன.
- தாவரங்கள் மண் வளம் காத்தல், மண் அரிப்பு தடுத்தல், ரப்பர் உற்பத்தி, உயிரி எரிபொருள் ஆகிய பல்வேறு பயன்களை வழங்குகின்றன.