நாடகத்தின் தோற்ற வரலாறு
- தமிழ் மொழியின்கண் வழங்கும் கலைகளை இயல் இசை நாடகம் என பகுத்து கூறுவது மரபு
- பழந்தமிழில் கூத்து என்ற சொல் நாடகத்தை குறித்தது
- அரங்கம் மற்றும் அரங்க நிகழ்வுகள் குறித்து தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல் வழியாகவும், சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை வழியாகவும் விரிவான செய்திகளை அறிய முடிகிறது
நாடகத்துறையின் புதிய பரிமாணத்திற்கு காரணமானவர்கள்:
-
சங்கரதாஸ் சுவாமிகள்
- கூத்திற்கு புதிய வடிவம் தந்தவர்
- மேலைநாட்டு உத்திகளையும் இணைத்து புதிய போக்கினை உருவாக்கினார்
- தமிழ் நாடகங்களில் பாடல்களின் கருத்துக்களைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் உரைநடையில் இடம்பெறச் செய்தார்
-
பம்மல் சம்பந்தனார்
- 1891 ஆம் ஆண்டு சுகுண விலாச சபையை நிறுவினார்
- 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேடைகளில் பல புதுமைகளை கையாண்டார்
- பரிதிமாற்கலைஞர்
- நாடகவியல் என்னும் நூல் நாடகக்கலைக்கு இலக்கணம் வகுத்தது
தெரியுமா?
1946 ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக 'அமைதி' என்னும் தலைப்பில் உரையாடல் இல்லாத மெளன நாடகம் பாரதிதாசனால் எழுதப்பட்டது. இந்நாடகம் பதினாறு காட்சிகளைக் கொண்டது.
நாடக அமைப்புகள்
தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள்:
- அகில இந்திய அளவில் 'பாரதீய நாட்டியகஸ்' என்னும் நாடக அமைப்பு உருவாக்கப்பட்டு, யுனெஸ்கோவின் சர்வதேச நாடகக்கலை மையத்தோடு இணைக்கப்பட்டது
- இந்திய அரசின் முயற்சியால் நிகழ்கலைகளின் வளர்ச்சிக்காக மத்திய சங்கீத நாடக அகாதமி உருவாக்கப்பட்டது
- நாடகத்துறைக்கென்றே பயிற்சியளிக்க தேசிய நாடகப் பள்ளி உருவாக்கப்பட்டது
உலக நாடக கழகம் உருவாக்கப்பட்டது