தாய் - மார்க்ஸிம் கார்க்கி (1868 - 1936)
- மூல மொழி: ரஷ்ய மொழி
- தமிழ் மொழிபெயர்ப்பு: தொ.மு.சி.ரகுநாதன்
- உலகப்புகழ் பெற்ற இலக்கிய படைப்பாளர்
- பிறந்த இடம்: ரஷ்யாவிலுள்ள நிழ்னி நோவோகார்டு
- இயற்பெயர்: அலெக்ஸி மாக்சிகொவிச் பெஸ்கோவ்
- வாழ்க்கையின் வறுமையான பக்கங்களை அனுபவித்ததால் தான் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை படைக்க முடிந்தது
- ரஷ்யப் புரட்சியாளர் லெனினுடன் நண்பர்கள்
- லெனின் புரட்சி நிதி வேண்டி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார்
- அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து 'தாய்' புதினம் எழுதினார்
- உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்த புதினம் தான்
நோபல் பரிசு
- ஆல்பிரட் நோபல் பெயரில் 1895 ஆம் ஆண்டு நோபல் அறக்கட்டளை நிறுவப்பட்டது
- சுவீடிய அரசு கல்விக்கழகம், கரோலின்கா நிறுவனம், நார்வே நோபல் குழு ஆகியவற்றால் வழங்கப்படுகிறது
- 1901 ஆம் ஆண்டு முதல் வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மருத்துவம் ஆகிய துறைகளில் வழங்கப்படுகிறது
- 1968 ஆம் ஆண்டிலிருந்து பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசும் வழங்கப்படுகிறது
- இரவீந்திர நாத் தாகூர் - 1913 ஆம் ஆண்டு தமது 'கீதாஞ்சலி' என்ற நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்