பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
TNPSC பொதுத் தமிழ் பாடத்திட்டம் — அலகு II (சொல்லகராதி). மொத்தம் 40 செய்திகள்.
- அறுசுவை - இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு
- உறுதிப் பொருள்கள் - அறம், பொருள், இன்பம், வீடு
- எட்டுத்தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
- ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம்
- ஐஞ்சிறுங்காப்பியங்கள் - சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமாரகாவியம், உதயணகுமார காவியம்
- ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
- ஐந்தொகை - முதல், மரபு, செலவு, இருப்பு, ஆதாயம்
- ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால்
- ஐம்புலன் - ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை
- ஐம்பெருங்காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி
- ஐம்பெருங்குழு - சாரணர், சேனாதியார், தூதர், புரோகிதர், அமைச்சர்
- ஐம்பெரும்பொருள் - நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்
- ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி
- சிறுபொழுது - காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை
- திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி
- தேவாரம் பாடிய மூவர் - சம்பந்தர், அப்பர், சுந்தரர்
- தொல்காப்பிய அகப்பொருள் கோட்பாடுகள் - முதல் பொருள், கருப்பொருள், உரிப்பொருள்
- நவதானியங்கள் - நெல், துவரை, பச்சைப்பயறு, உளுந்து, எள், அவரை, கடலை, கொள்ளு, கோதுமை
- நால்வகை சொல் - பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
- நாற்திசை - கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
- நாற்படை - தேர், யானை, குதிரை, காலாட்படை
- நாற்பால் - அரசன், அந்தணன், வணிகன், வேளாளன்
- நான்கு குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
- நான்மறை - ரிக், யஜூர்,சாமம், அதர்வணம்
- பாவகை - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
- பெண்களின் ஏழு பருவங்கள் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
- ஆண்பால் பிள்ளைத்தமிழ் 10 பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
- பெண்பால் பிள்ளைத்தமிழ் 10 பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்பு, நீராடல், அம்மானை, ஊசல்
- பெரும்பொழுது - கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பனி, இளவேனிற்காலம், முதுவேனிற்காலம்
- முக்கனி - மா, பலா, வாழை
- முக்காலம் - இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்
- முச்சங்கம் - முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
- முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
- முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
- முப்பால் - அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
- மூவகை மொழிகள் - தனிமொழி, பொதுமொழி, தொடர்மொழி
- மூவண்ணம் - காவி, வெண்மை, பச்சை
- மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை
- மூவேந்தர்கள் - சேரன், சோழன், பாண்டியன்
- மூன்று முரசு - கொடை முரசு, படை முரசு, மங்கள முரசு
மூலம்
- TNPSC General Tamil Study Materials (Old Edition) › 5. பொருந்தாத சொல்லை கண்டறிதல்