செம்மீன் - தகழி சிவசங்கரன் (1912 - 1999)
- மூல மொழி: மலையாளம்
- தமிழ் மொழிபெயர்ப்பு: சுந்தரராமசாமி
- மலையாள மொழியின் யதார்த்தவாத முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவர்
- 36 நாவல்கள், 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு நாடகம்
- கேரளத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவி நிலைநாட்டியவர்
- கேரள சாகித்ய அகாதமி தலைமை
- 'ஏணிப்படி' புதினத்திற்கு கேந்திர சாகித்ய அகாதமி விருது
- ஞானபீட விருது - 1984
- செம்மீன் - 1957 இல் சாகித்ய அகாதமி விருது
- செம்மீன் திரைப்படமாகவும் வெளிவந்து மிகுந்த வெற்றி
ஞானபீட விருது
- இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது
- பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கிய கழகத்தால் வழங்கப்படுகிறது
- 1961-ல் சாகு சாந்தி பிரசாத் ஜெயின் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது
- 1965 இல் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ.சங்கர குருப்பிற்கு வழங்கப்பட்டது
- 'முதல் சத்தியம்' என்ற புதினத்திற்காக இந்த விருதை பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆஷா பூர்ணாதேவி
- 1982 ஆம் ஆண்டு வரை ஓர் எழுத்தாளரின் சிறந்த படைப்பிற்காக வழங்கப்பட்டது
- அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது
- தமிழில்:
- அகிலன் - 1975 (சித்திரப்பாவை புதினம்)
- ஜெயகாந்தன் - 2002 (இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பு)