சந்திப்பிழை
TNPSC பொதுத் தமிழ் பாடத்திட்டம் — அலகு 1 (இலக்கணம்). மொத்தம் 246 செய்திகள்.
வல்லின எழுத்துக்கள் ஆறு – க், ச், ட், த், ப் இவைகளில் க், ச், த், ப் ஆகிய எழுத்துகள் மிகவும் வலிமையானவை. ட்,ற் – ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வர இயலாதவை வல்லினம் என்று அழைக்கப்படும்.
வல்லினம் மிகும் இடங்கள்
1. இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும் (ஐ)
எடுத்துக்காட்டு
- குழந்தையை + கண்டேன்₌ குழந்தையைக் கண்டேன்
- பொருளை + தேடு ₌ பொருளைத்தேடு
- புலியை + கொன்றான் ₌ புலியைக் கொன்றான்
- நூலை + படி ₌ நூலைப்படி
2. நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும்.
எடுத்துக்காட்டு
- வீட்டிற்கு + சென்றான் ₌ வீட்டிற்குச் சென்றான்
- கல்லூரிக்கு + போனாள் ₌ கல்லூரிக்குப் போனாள்
3. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும். ‘அது’ – மறைந்திருப்பது
எடுத்துக்காட்டு
- தாமரை + பூ ₌ தாமரைப்பூ
- குதிரை + கால் ₌ குதிரைக்கால்
4. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும்.
எடுத்துக்காட்டு
- குடி + பிறந்தார் ₌ குடிப்பிறந்தார்
- வழி + சென்றார் ₌ வழிச்சென்றார்
5. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் வர மிகும் (வல்லெழுத்தை அடுத்து வந்த குற்றிலுகரம்)
எடுத்துக்காட்டு
- பாக்கு + தூள் ₌ பாக்குத்தூள்
- தச்சு + தொழில் ₌ தச்சுத்தொழில்
- கேட்டு + கொடு ₌ கேட்டுக்கொடு
- பத்து + பாட்டு ₌ பத்துப்பாட்டு
- படிப்பு + செலவு ₌ படிப்புச்செலவு
- பற்று + தொகை ₌ பற்றுத்தொகை
6. மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் சில இடங்களில் வல்லினம் மிகும்.
எடுத்துக்காட்டு
- மருந்து + கடை ₌ மருந்துக்கடை
- கன்று + குட்டி ₌ கன்றுக்குட்டி
- இரும்பு + தூள் ₌ இரும்புத்தூள்
7. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் ‘எ’ என்னும் வினா எழுத்திற்குப் பின்னும் வலி மிகும்.
எடுத்துக்காட்டு
- அ + கடல் ₌ அக்கடல்
- இ + பாடம் ₌ இப்பாடம்
- உ + சிறுவன் ₌ உச்சிறுவன்
- எ + தொழில் ₌ எத்தொழில்
8. சுட்டு, வினாக்களின் திரிபுகளான அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
எடுத்துக்காட்டு
- எந்த + செயல் ₌ எந்தச்செயல்
இந்த +தமிழ் ₌ இந்தத்தமிழ்
- அந்த + கிணறு ₌ அந்தக்கிணறு
9. அந்த, இந்த, அப்படி, இப்படி என்னும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
எடுத்துக்காட்டு
- இந்த + சிறுவன் ₌ இந்தச்சிறுவன்
- அப்படி + செய் ₌ அப்படிச்செய்
- அந்த + பையன் ₌ அந்தப்பையன்
இப்படி +பார் ₌ இப்படிப்பார்
10. எந்த, எப்படி, எங்கு என்ற வினாச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
எடுத்துக்காட்டு
- எப்படி + சாதித்தாய் ₌ எப்படிச்சாதித்தாய்?
- எந்த + செடி ₌ எந்தச்செடி?
- எங்கு + பார்த்தாய் ₌ எங்குப்பார்த்தாய்?
11. நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்கää வருமொழி முதலில் வரும் வல்லினம் மிகுந்து ஒலிக்கும் (உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்)
எடுத்துக்காட்டு
- மழை + காலம் ₌ மழைக்காலம்
- பனி + துளி ₌ பனித்துளி
- நிலா + சோறு ₌ நிலாச்சோறு
12. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
- மார்கழி + திங்கள் ₌ மார்கழித்திங்கள்
மல்லி +பூ ₌ மல்லிப்பூ
- சாரை + பாம்பு ₌ சாரைப்பாம்பு
13. பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
- வட்டம் + பாறை ₌ வட்டப்பாறை
- பச்சை + பட்டு ₌ பச்சைப்பட்டு
- சதுரம் + பலகை ₌ சதுரப்பலகை
14. அகர இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
- வர + சொன்னான் ₌ வரச்சொன்னான்
- தேட + சொன்னான் ₌ தேடச்சொன்னான்
- ஓடி + பிடித்தான் ₌ ஓடிப்பிடித்தான்
15. ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
பூ +பறித்தான் ₌ பூப்பறித்தான்
- தீ + பற்றியது ₌ தீப்பற்றியது
- கை + கரண்டி ₌ கைக்கரண்டி
16. ஆய், போய் என்னும் வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
- போய் + தேடு ₌ போய்த்தேடு
- நன்றாய் + பேசினார்₌ நன்றாய்ப்பேசினார்
17. இனி, தனி மற்று, மற்ற, மற்றை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
- மற்றை + கூறுகள் ₌ மற்றைக் கூறுகள்
- மற்று + கண்டவை ₌ மற்றுக்கண்டவை
- மற்ற + பொருள்கள் ₌ மற்றப்பொருள்கள்
- தனி + தமிழ் ₌ தனித்தமிழ்
- இனி + காணலாம் ₌ இனிக்காணலாம்
18. என, ஆக என்னும் சொற்களுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.
எடுத்துக்காட்டு
- ஆக + சொன்னான் ₌ ஆகச்சொன்னான்
- என + கூறினான் ₌ எனக்கூறினான்
19. சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
- தவ + பெரிது ₌ தவப்பெரிது
- சால + சிறந்தது ₌ சாலச்சிறந்தது
20. ஈறுகெட்ட எதிரிமறைப் பெயரெச்சத்தின் பின்வரும் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
- ஓடா + குதிரை ₌ ஓடாக்குதிரை
- உண்ணா + சோறு ₌ உண்ணாச்சோறு
- அழியா + புகழ் ₌ அழியாப்புகழ்
21. தனிக்குறிலையடுத்து வரும் ஆ என்னும் நெடிலுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
- பலா + சுளை ₌ பலாச்சுளை
- கனா + காலம் ₌ கனாக்காலம்
- இரா + பகல் ₌ இராப்பகல்
22. முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
- திரு + குறள் ₌ திருக்குறள்
- பொது + சொத்து ₌ பொதுச்சொத்து
23. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
- மலர் + கூடை ₌ மலர்க்கூடை
- தண்ணீர் + குடம் ₌ தண்ணீர்க்குடம்
24. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
- இரும்பு + சாவி ₌ இரும்புச்சாவி
- மரம் + பெட்டி ₌ மரப்பெட்டி
25. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
- சட்டை + துணி ₌ சட்டைத்துணி
- குடை + கம்பி ₌ குடைக்கம்பி
26. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
- விழி + புனல் ₌ விழிப்புனல்
- அடுப்பு + புகை ₌ அடுப்புப்புகை
27. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
- மலர் + கண் ₌ மலர்க்கண்
- பவளம் + பற்று ₌ பவளப்பற்று
28. ட, ற, ஒற்று இரட்டிக்கும் உயிர்தொடர், நெடி தொடர் குற்றியலுகரத்திற்குப் பின்
வல்லினம் மிகும்
எடுத்துக்காட்டு
- வயிறு + போக்கு ₌ வயிற்றுப்போக்கு(உயிர்த்தொடர்)
- முரடு + காளை ₌ முரட்டுக்காளை
- நாடு + பற்று ₌ நாட்டுப்பற்று (நெடில்தொடர்)
- காடு + தேன் ₌ காட்டுத்தேன்
வல்லினம் மிகா இடங்கள்
1. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினமிகாது
எடுத்துக்காட்டு
- நீர் + குடித்தான் ₌ நீர் குடித்தான்
- துணி + கட்டினான் ₌ துணி கட்டினான்
- தமிழ் + கற்றார் ₌ தமிழ் கற்றார்
2. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- தாய் + தந்தை ₌ தாய் தந்தை
செடி+கொடி ₌ செடி கொடி
- இரவு + பகல் ₌ இரவு பகல்
3. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து மற்றப் பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- படித்த + பெண் ₌ படித்த பெண்
- நல்ல + குழந்தை ₌ நல்ல குழந்தை
- செய்யாத + செயல் ₌ செய்யாத செயல்
4. உயர்திணைப் பொதுப்பெயர்களின் பின் வல்லினமிகாது
எடுத்துக்காட்டு
- மாணாக்கர் + கூடினர் ₌ மாணாக்கர் கூடினர்
- தொழிலாளர் + தலைவர் ₌ தொழிலாளர் தலைவர்
- தாய் + பாடினாள் ₌ தாய் பாடினாள்
5. அஃறிணை வினைமுற்றின் பின் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- வந்தது + கப்பல் ₌ வந்தது கப்பல்
- முழங்கின + சங்குகள் ₌ முழங்கின சங்குகள்
- பாடின + குயில்கள் ₌ பாடின குயில்கள்
6. எட்டு, பத்து தவிர மற்ற எண்களின் பின் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- மூன்று + கிளி ₌ மூன்று கிளி
- ஒன்று + கொடு ₌ ஒன்று கொடு
- இரு + சீர் ₌ இருசீர்
7. அது, இது என்னும் சட்டகளின் பின்னும் எது? யாது? என்னும் வினாச் சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.
எடுத்துக்காட்டு
- யாது + சொல் ₌ யாது சொல்?
- எது + கண்டது ₌ எது கண்டது?
- இது + பறந்தது ₌ இது பறந்தது
- அது + போயிற்று ₌ அது போயிற்று
8. அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
எடுத்துக்காட்டு
- இத்தனை + பூக்களா? ₌ இத்தனை பூக்களா?
- அத்தனை + பழங்களா? ₌ அத்தனை பழங்களா?
- எத்தனை + தேங்காய்? ₌ எத்தனை தேங்காய்?
9. வினாவை உணர்த்தும் ஆ, ஓ, ஏ, யா என்னும் வினா எழுத்துகளின் பின் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- இவளோ + போனாள் ₌ இவளோ போனாள்?
- அவனே + செல்வான் ₌ அவனே செல்வான்?
- அவளா + தைத்தாள் ₌ அவளா தைத்தாள்?
10. சில, பல என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- பல + குடிசைகள் ₌ பல குடிசைகள்
- சில + சொற்கள் ₌ சில சொற்கள்
11. விளிப்பெயர் பின்னும், வியங்கோள் வினைமுற்றின் பின்னும் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- வேலா + செல் ₌ வேலாசெல்
- வாழ்க + தமிழ் ₌ வாழ்கதமிழ்
- கண்ணா + கேள் ₌ கண்ணாகேள்
12. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- வள்ளி + படித்தாள் ₌ வள்ளி படித்தாள்
- நாய் + போனது ₌ நாய் போனது
13. வினைத்தொகையில் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- விரி + கதிர் ₌ விரி கதிர்
- ஊறு + காய் ₌ ஊறுகாய்
- ஆடு + கொடி ₌ ஆடு கொடி
14. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- பாம்பு + பாம்பு ₌ பாம்புபாம்பு
- தீ + தீ ₌ தீதீ
15. சில ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- ஒளவை + சொல் ₌ ஒளவை சொல்
வள்ளுவர் +கருத்து ₌ வள்ளுவர் கருத்து
16. அவை இவை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
அவை+போயின ₌ அவை போயின
- இவை + செய்தன ₌ இவை செய்தன
17. படியென்னும் சொல் வினையோடு சேர்ந்து வருமிடத்தில் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- போகும்படி + சொன்னான் ₌ போகும்படி சொன்னான்
வரும்படி +கூறினான் ₌ வரும்படி கூறினான்
18. இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- கல + கல ₌ கலகல
- பள + பள ₌ பளபள
19. அவை, இவை என்னம் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- அவை + சென்றன ₌ அவை சென்றன
- இவை + செய்தன ₌ இவை செய்தன
20. அது, இது என்னும் சுட்டுகளின் பின்வரும் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- அது + பறந்தது ₌ அது பறந்தது
- இது + கடித்தது ₌ இது கடித்தது
21. எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- எது + பறந்தது ₌ எது பறந்தது?
- யாது + தந்தார் ₌ யாது தந்தார்?
22. இரண்டு வடசொற்கள் சேரும்போது வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- சங்கீத + சபா ₌ சங்கீத சபா
- மகாஜன + சபா ₌ மகாஜன சபா
23. சில வினையெச்சத் தொடரில் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு
- செய்து + கொடுத்தான் ₌ செய்து கொடுத்தான்
- வந்து + போனான் ₌ வந்து போனான்
மூலம்
- TNPSC General Tamil Study Materials (Old Edition) › சந்திப்பிழையை நீக்குதல்