புதின வகைகள்
1. வரலாற்றுப் புதினங்கள்
வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு புனையப்படும் புதினங்கள்.
குறிப்பிடத்தக்க வரலாற்றுப் புதினங்கள்:
- கல்கி: பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்
- சாண்டில்யன்: ராஜதிலகம்
- கலைஞர் கருணாநிதி: ரோமாபுரிப் பாண்டியன்
- கண்ணதாசன்: சேரமான் காதலி
2. இலட்சியவாத புதினங்கள்
காந்திய இலட்சியங்களை முன்னிலைப்படுத்தி தமிழில் புதினங்கள் எழுதிய முன்னோடி காசி.வேங்கடரமணி.
குறிப்பிடத்தக்க இலட்சியவாத புதினங்கள்:
- காசி.வேங்கடரமணி: தேச பக்தன் கந்தன், முருகன் ஓர் உழவன்
- மு.வரதராசனார்: அகல் விளக்கு, கள்ளோ? காவியமோ?, கரித்துண்டு, நெஞ்சில் ஒரு முள்
- அகிலன்: சித்திரப்பாவை (ஞானபீட விருது - 1975)
- நா.பார்த்தசாரதி: இலட்சியவாதிகளான நாயக, நாயகிகளின் சித்திரிப்புகள்
3. நவீனப் புதினங்கள்
புதினத்திற்கான மரபார்ந்த கட்டமைப்புகளைத் தகர்த்து, இயல்புவாதம் பேசுவன.
குறிப்பிடத்தக்க நவீனப் புதினங்கள்:
- ஆர்.ஷண்முகசுந்தரம்: நாகம்மாள், பூவும் பிஞ்சும், அழியாக் கோலங்கள் (கிராமத்து வாழ்க்கை)
- எம்.வி.வெங்கட்ராம்: உளவியல் அடிப்படையிலான மனவோட்டங்கள்
4. முற்போக்கு புதினங்கள்
தொ.மு.சி.ரகுநாதன் - தமிழில் முற்போக்கு புதினங்களை முதலில் தந்தவர்.
- பஞ்சும் பசியும் - பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்ட வாழ்வு
ஜெயகாந்தன்: முற்போக்கு சிந்தனையாளர்
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- கங்கை எங்கே போகிறாள்
- சுந்தரகாண்டம்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
5. வட்டார வழக்கு புதினங்கள்
குறிப்பிட்ட ஒரு பகுதியை களமாக கொண்டு அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் குறிக்கோளுடன் எழுதப்படுவன.
குறிப்பிடத்தக்க வட்டாரப் புதினங்கள்:
- ஆர்.சண்முக சுந்தரம்: நாகம்மாள், அறுவடை
- கி.ராஜநாராயணன்: கோபல்ல கிராமம்
- பெருமாள் முருகன்: ஏறுவெயில்
- சோலை சுந்தர பெருமாள்: செந்நெல்
- சுப்ரபாரதி மணியன்: சாயத்திரை
6. விளிம்புநிலை வாழ்வியல் புதினங்கள்
வாழ்க்கை அனுபவங்கள் தந்த நேரடியான வலிகளையும் தங்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் அவற்றிலிருந்து மீளத்துடிக்கும் உணர்வுகளையும் பதிவு செய்பவை.
குறிப்பிடத்தக்க விளிம்புநிலைப் புதினங்கள்:
- பாமா: கருக்கு, சங்கதி, வன்மம்
- இமையம்: கோவேறு கழுதைகள் (முதல் படைப்பு), செடல், ஆறுமுகம், எங்கதெ, செல்லாத பணம்
- சிவகாமி: ஆனந்தாயி, பழையன கழிதலும்
- சோ.தர்மன்: கூகை, தூர்வை
- ஸ்ரீதர கணேசன்: உப்புவயல்
- அழகியபெரியவன்: தகப்பன் கொடி
7. பெரும் வாசகப் பரப்பு - பொழுதுபோக்கு
வேடிக்கை, விளையாட்டு, காதல், மர்மம், குற்றம் ஆகியவை கலந்த வாசிப்புச் சுவைமிக்க படைப்புகள்.
சுஜாதா:
- என் இனிய இயந்திரா, மீண்டும் ஜூனோ (அறிவியல் புனைவுகள்)
- கரையெல்லாம் செண்பகப்பூ, கனவுத் தொழிற்சாலை, இரத்தம் ஒரே நிறம்
பாலகுமாரன்:
- மனச்சலனங்கள், உறவுச் சிக்கல்கள்
- உடையார் - இராஜராஜசோழனைப் பற்றிய வரலாற்றுப் புதினம்
8. பெரும் வாசகப்பரப்பு - இலக்கியத்தன்மை
ஜெயமோகன்:
- விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு, ரப்பர், ஏழாம் உலகம், கொற்றவை
- உபபாண்டவம் (மகாபாரதம் அடிப்படை)
- நெடுங்குருதி (மதுரை மாவட்ட குற்றப்பரம்பரை)
எஸ்.ராமகிருஷ்ணன்:
- சஞ்சாரம் (சாகித்ய அகாதமி விருது - 2018)
பெருமாள் முருகன்:
- நிழல்முற்றம், கூளமாதாரி, மாதொருபாகன்
பிற முக்கிய எழுத்தாளர்கள்: பாவண்ணன், தமிழவன், ஜோ டி குரூஸ்
9. பின்நவீனத்துவ புதினங்கள்
குறிப்பிடத்தக்க பின்நவீனத்துவப் புதினங்கள்:
- கோணங்கி: பாழி, பிதிரா
- சாருநிவேதிதா: எக்ஸ்டென்ஸியலிசமும் பேன்சி பனியனும், ஜீரோ டிகிரி
- பிரேம், ரமேஷ்: எரிக்கப்பட்ட பிரதிகளும் புதைக்கப்பட்ட மனிதர்களும், சொல் என்றொரு சொல்
- எம்.யுவன்: குள்ளச்சித்தன் சரித்திரம், பகடையாட்டம்
இளம் எழுத்தாளர்கள்: சு.வேணுகோபாலன், கண்மணி குணசேகரன், முருகவேல், உமா மகேஸ்வரி, சல்மா, லட்சுமி சரவணக்குமார், வினாயக முருகன், கரன் கார்க்கி, சரவணன், சந்திரன்
சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினங்கள்
|
ஆண்டு |
புதினம் |
ஆசிரியர் |
|
1956 |
அலை ஓசை |
கல்கி |
|
1961 |
அகல் விளக்கு |
மு.வரதராசன் |
|
1963 |
வேங்கையின் மைந்தன் |
அகிலன் |
|
1971 |
சமுதாய வீதி |
நா.பார்த்தசாரதி |
|
1972 |
சில நேரங்களில் சில மனிதர்கள் |
ஜெயகாந்தன் |
|
1973 |
வேருக்கு நீர் |
ராஜம் கிருஷ்ணன் |
|
1977 |
குருதிப்புனல் |
இந்திரா பார்த்தசாரதி |
|
1980 |
சேரமான் காதலி |
கண்ணதாசன் |
|
1984 |
ஒரு காவிரியைப் போல |
லஷ்மி |
|
1990 |
வேரில் பழுத்த நிலா |
சு.சமுத்திரம் |
|
1991 |
கோபல்லபுரத்து மக்கள் |
கி.ராஜநாராயணன் |
|
1992 |
குற்றாலக் குறவஞ்சி |
கோவி.மணிசேகரன் |
|
1993 |
காதுகள் |
எம்.வி.வெங்கட்ராம் |
|
1994 |
புதிய தரிசனங்கள் |
பொன்னீலன் |
|
1995 |
வானம் வசப்படும் |
பிரபஞ்சன் |
|
1997 |
சாய்வு நாற்காலி தோப்பில் |
முகமது மீரான் |
|
1998 |
விசாரணைக் கமிஷன் |
சா.கந்தசாமி |
|
2001 |
சுதந்திர தாகம் |
சி.சு.செல்லப்பா |
|
2003 |
கள்ளிக்காட்டு இதிகாசம் |
வைரமுத்து |
|
2005 |
கல்மரம் |
ஜி.திலகவதி |
|
2007 |
இலையுதிர் காலம் |
நீல பத்மநாபன் |
|
2011 |
காவல் கோட்டம் |
சு.வெங்கடேசன் |
|
2012 |
தோல் |
டி.செல்வராஜ் |
|
2013 |
கொற்கை |
ஜோடி குரூஸ் |
|
2014 |
அஞ்ஞாடி |
பூமணி |
|
2015 |
இலக்கியச்சுவடுகள் |
ஆ.மாதவன் |
|
2018 |
சஞ்சாரம் |
எஸ்.ராம்கிருஷ்ணன் |
|
2019 |
சூல் |
சோ.தர்மன் |
புதினங்கள் - பொதுவான தகவல்கள்
- 'நாவெலா' என்னும் இத்தாலிய மொழிச் சொல்லிலிருந்து, 'நாவல்' என்னும் ஆங்கிலச்சொல் பிறந்தது
- இச்சொல் புதுமை என்னும் பொருளுடையது. இதனால் நாவலைப் 'புதினம்' என்றழைத்தனர்
- உண்மை நிகழ்ச்சிகளையும், செயல்களையும் கூறியதுடன், கற்பனை மாந்தரையும் நிகழ்ச்சிகளையும் படைத்து புனைந்து கூறியமையால் புதினம், 'புனைகதை' என்னும் பெயரும் பெற்றது
- குறும்புதினங்கள் சிறுகதையின் போக்கிலிருந்து சற்று மாறுபட்டவை
- இதன் கதைப்பின்னல் நீண்ட வரலாறு போல் அமையாமல் சிறுகதை போல் அமைந்திருக்கும்
- புதினத்திலிருந்து அளவால் சுருங்கியதாக இருந்தாலும் இது புதினத்தின் ஒரு பிரிவாகும்