தமிழ்ப் புதினங்களின் தோற்றம்
- தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை (1879) மாயூரம் வேதநாயகம் எழுதினார்
- இப்புதினம் ஒரு பொதுவான கதைசொல்லும் பாங்கில் சுவையான நிகழ்வுகளை கோர்த்து எழுதப்பட்டது
- அதன்பின் ராஜமய்யரால் எழுதப்பட்ட கமலாம்பாள் சரித்திரமும் (1896) அ.மாதவையாவால் எழுதப்பட்ட பத்மாவதி சரித்திரமும் (1898) தமிழின் தொடக்ககாலப் புதினங்களாக அறியப்படுகின்றன
- அ.மாதவையா எழுதிய முத்து மீனாட்சி என்னும் புதினம் சமூக சீர்திருத்தப் புதினங்களுக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது எனலாம்
- வடுவூர் துரைசாமி, ஆரணி குப்புசாமி, ஜே.ஆர்.ரங்கராஜு முதலியோரின் புதினங்கள் அக்கால வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன
- வை.மு.கோதைநாயகி அம்மாள் பெண்களுக்கான புதினங்களை எழுதினார்
- தமிழ்ப் புதின இலக்கிய வளர்ச்சியில் பெரியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கல்கி
- நாட்டு விடுதலை உணர்வை மையமாகக் கொண்ட தியாகபூமி, அலை ஓசை, கள்வனின் காதலி, மகுடபதி, பொய்மான் கரடு ஆகியன கல்கியின் சமூகப் புதினங்களில் குறிப்பிடத்தக்கவை
- தமிழ்ப் புதின வகைக்கான பாரதியாரின் பங்களிப்பாக அவரின் சந்திரிகையின் கதை (1920) அமைகிறது
- முற்றுப்பெறாமலேயே முதல்பாகத்துடன் முடிந்துவிடுகிற இப்புதினம் பாரதியின் இறுதிக்கால நூலாக அறியப்படுகிறது