சிற்றிலக்கியங்கள்
அறிமுகம்
- தமிழ் இலக்கியங்கள் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இருவகைப்படும்
- பாட்டுடைத் தலைவனின் வாழ்வில் சிறுகூறினை மட்டும் எடுத்துக்கொண்டு அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்று அமையப்பாடுவது சிற்றிலக்கியம்
- இது 96 வகைப்படும்
- அவற்றுள் அந்தாதி, கலம்பகம், பரணி, கோவை, சதகம், பிள்ளைத்தமிழ், பள்ளு, குறவஞ்சி, உலா, தூது ஆகியன பெரும்பாலும் வழக்கில் உள்ளன
வகையும் தொகையும்
- சிற்றிலக்கியத்தின் இலக்கணத்தையும், எண்ணிக்கையையும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன
- ஒவ்வொரு பாட்டியல் நூலும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன
- இருப்பினும் பிரபந்த மரபியல், பிரபந்த தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன 96 எனக் குறிப்பிடுகின்றன
முக்கிய சிற்றிலக்கிய வகைகள்
1. அந்தாதி
- ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்த பாடலின் அல்லது அடுத்த அடியின் தொடக்கமாக கொண்டு பாடப்படுவது அந்தாதி
- அந்தம்+ஆதி (அந்தம் - இறுதி; ஆதி - தொடக்கம்)
- இது சொற்றொடர் நிலை எனப் பெயர் பெறும்
2. கலம்பகம்
- அம்மானை, கார், ஊசல், கைக்கிளை, புயவகுப்பு முதலான பதினெட்டு உறுப்புகள் அமையப் பாடப்படுவது கலம்பகம்
- கலம் - பன்னிரண்டு; பகம் - ஆறு
- அவற்றுள் அம்மானை மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றாகும்
- பாட்டுடைத் தலைவனின் புகழை ஒரு பெண் புகழ்ந்து பாட, மற்றொரு பெண் அது தொடர்பான ஒரு வினா கேட்டு, மூன்றாம் பெண் ஒரு கருத்தைக் கூறி முடித்து வைப்பது அம்மானை
3. பரணி
- போரில் ஆயிரம் யானைகளை கொன்று வெற்றிபெறும் வீரனின் மேல் பாடப்படுவது பரணி
- போரில் தோற்ற அரசனது நாட்டின் பெயரால் இந்நூல் வழங்கப்பெறும்
4. கோவை
- அகப்பொருளுக்குரிய துறைகள் பலவற்றை 400 கட்டளைக் கலித்துறையால் சங்கிலித்தொடர் போலப் பாடப்பட்டது கோவையாகும்
- கடவுளரையோ, அரசரையோ, படைத்தலைவரையோ, வள்ளல்களையோ பாட்டுடைத் தலைவராக கொண்டு பாடப்படுவது
- உதாரணம்: தஞ்சாவூரில் பிறந்த சந்திரவாணன், பாண்டிவள நாட்டைச் சார்ந்த குலசேகர பாண்டியனின் அமைச்சராக விளங்கினான். இவன் புலவர்களை புரக்கும் வள்ளலாக விளங்கினமையால் பொய்யாமொழிப்புலவர் இவன் பெயரில் தஞ்சைவாணன் கோவையை எழுதினார்
5. சதகம்
- தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாக கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம்
- சதம் என்பது நூறு எனப் பொருள்படும்
- நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் எனப்பட்டது
6. பிள்ளைத்தமிழ்
- கடவுளரையோ, அரசரையோ, பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தை பருவத்தைப் பத்து பருவங்களாக பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்
- இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள்:
- காப்பு
- செங்கீரை
- தால்
- சப்பாணி
- முத்தம்
- வருகை
- அம்புலி
- சிற்றில்
- சிறுதேர்
- சிறுபறை
பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள்:
முதல் ஏழு பருவங்கள் (ஆண்பாற் போல) + இறுதி மூன்று பருவங்கள்: 8. அம்மானை 9. நீராடல் 10. ஊசல்
செங்கீரை: பிள்ளைத்தமிழில் இரண்டாவது பருவமாகும். தொட்டில் பிள்ளை தலையை உயர்த்திக் கையை ஊன்றி உடம்பை அசைத்து ஆடுதலைச் செங்கீரைப்பருவம் என்பர்.
7. பள்ளு
- சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும்
- உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம் பள்ளு இலக்கியம் எனப்படும்