காப்பியங்கள்
காப்பிய இலக்கணம்
- கி.பி 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய 'தண்டியலங்காரம்' காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது
பெருங்காப்பியம்
-
நான்கு பொருள்கள்
: அறம், பொருள், இன்பம், வீடு
சிறுகாப்பியம்
- நான்கு பொருள்களுள் ஒன்றோ, பலவோ குறைந்து வருவது
காப்பிய பிரிவுகள்
- பெரும்பிரிவு: காண்டம், இலம்பகம், பருவம்
- உட்பிரிவு: சருக்கம், கதை, படலம்
ஐம்பெருங்காப்பியங்கள்
- சிலப்பதிகாரம் (சங்கம் மருவிய காலம்)
- மணிமேகலை (சங்கம் மருவிய காலம்)
- சீவக சிந்தாமணி (சோழர் காலம்)
- வளையாபதி (சோழர் காலம், காலவெள்ளத்தில் அழிந்தது)
- குண்டலகேசி (சோழர் காலம், காலவெள்ளத்தில் அழிந்தது)
சிலப்பதிகாரம்
- தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம்
- சிலம்பால் உருவான நிகழ்வுகளையும் வரலாற்றையும் கூறுவதால் இப்பெயர்
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
- ஆசிரியர்: இளங்கோவடிகள் (சமண சமயம்)
- காலம்: கி.பி. 2 ஆம் நூற்றாண்டு
- சேரன் செங்குட்டுவனின் தம்பி
அமைப்பு
- மூன்று காண்டங்கள்: புகார் காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம்
- முப்பது காதைகள்: "மங்கல வாழ்த்துப் பாடல்" முதல் "வரந்தரு காதை" வரை
முப்பெரும் உண்மைகள்
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
காப்பியச் சிறப்புகள்
- குடிமக்கள் காப்பியம்
- முத்தமிழ் காப்பியம்
- நாடகக் காப்பியம்
- தேசிய காப்பியம்
- தமிழர்க்கு கிடைத்த அரிய காப்பியக் கருவூலம்
மணிமேகலை
- பெளத்தசமய காப்பியம்
- ஆசிரியர்: மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
- கதை: கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலையின் வரலாறு
- முப்பது காதைகள்: விழாவறை காதை முதல் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை வரை
- மற்ற பெயர்: மணிமேகலை துறவு
- சிலப்பதிகாரத்துடன் இரட்டைக்காப்பியம்
முக்கிய கருத்துக்கள்
பசியின் கொடுமை:
பசியாகிய கொடிய நோய்
குடிபிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
உணவு வழங்குவோரின் சிறப்பு:
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
காப்பியச் சிறப்புகள்
- கதைத்தலைவியால் பெயர் பெற்றது
- சமுதாய சீர்திருத்தக்காப்பியம்
- மூன்று ஒழிப்புகள்: பரத்தையொழிப்பு, மதுவொழிப்பு, சிறையொழிப்பு
சீவக சிந்தாமணி
- தமிழில் விருத்தப்பாவால் இயன்ற முதல் காப்பியம்
- ஆசிரியர்: திருத்தக்கதேவர்
- காலம்: கி.பி. 7 ஆம் நூற்றாண்டு
- சமணசமயக் காப்பியம்
- வடமொழி 'கத்திய சிந்தாமணி' யின் தழுவல்
- பதின்மூன்று இலம்பகங்கள்: நாமகள் இலம்பகம் முதல் முக்தி இலம்பகம் வரை
- 3145 பாடல்கள்
சிறப்புகள்
- வீரமாமுனிவர்: "தமிழ்க் கவிஞர்களுள் அரசன்"
- ஜி.யு.போப்: "உலக மகாகாவியங்களில் ஒன்று"
குண்டலகேசி
- பெளத்த சமய நூல்
- ஆசிரியர்: நாதகுத்தனார்
- முழுமையாக கிடைக்கவில்லை
- புறத்திரட்டில் 19 செய்யுள்கள், நீலகேசி உரையில் 180 பாக்கள் கிடைக்கின்றன
வளையாபதி
- ஐம்பெருங்காப்பியங்களுள் இறுதியாக வைத்து எண்ணப்படுவது
- முழுமையும் கிடைக்கவில்லை
- சமணசமயக் காப்பியம்
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- புறத்திரட்டுதொகையில் 66 செய்யுள்கள் கிடைக்கின்றன
- விருத்தப் பாக்கள்
- பாடல் பொருள்கள்: கள்ளாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை
ஐஞ்சிறு காப்பியங்கள்
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் உறுதிப்பொருள்களுள் ஒன்றோ, சிலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம்.
- உதயணகுமார காவியம்
- நாககுமார காவியம்
- யசோதர காவியம்
- சூளாமணி
- நீலகேசி
(அனைத்தும் சமண சமயக் காப்பியங்கள்)
உதயணகுமார காவியம்
- ஆறு காண்டங்கள்
- 367 பாடல்கள்
- இரண்டு பகுதிகள்: உதயணன் வரலாறு + நரவாகனன் வரலாறு
- பெருங்கதையிலிருந்து வேறுபட்டது
- ஆசிரியர் பெயர் அறியமுடியவில்லை
நாககுமார காவியம்
- மற்ற பெயர்: நாகபஞ்சமி கதை
- 170 விருத்தப்பாக்கள்
- ஐந்து சருக்கங்கள்
- கதை: நாககுமாரன் இளமையில் இன்பம் துய்த்து, இறுதியில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வது
யசோதர காவியம்
- யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாறு
- ஐந்து சருக்கங்கள், 320 பாடல்கள்
- கதை: அபயருசி, மாரிதத்தனுக்குத் தம் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சமண நெறிப்படுத்துதல்
சூளாமணி
- ஆசிரியர்: தோலாமொழித்தேவர்
- பன்னிரண்டு காண்டங்கள்
- 2131 விருத்தப்பாக்கள்
- கதை: திவிட்டன், விசயன் ஆகிய இருமன்னர்களைப் பற்றிய வரலாறு
- ஊழ்வினைக் கோட்பாட்டை வலியுறுத்துகிறது
நீலகேசி
- குண்டலகேசிக்கு மறுப்பு நூல்
- தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல்
- மற்ற பெயர்: நீலகேசி திரட்டு
- பத்துச் சருக்கங்கள், 895 விருத்தப்பாக்கள்
- தெய்வங்களுக்கு உயிர்பலி இடுதல் தீமை என எடுத்துரைக்கிறது
பிறகாப்பியங்கள்
பெருங்கதை
- வட இந்தியப் பகுதிகளைக் களமாக கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம்
- ஆசிரியர்: கொங்குவேளிர்
- மற்ற பெயர்கள்: கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை
- கதை: உதயணன் என்னும் காவிய தலைவனின் வாழ்க்கை
- மூல நூல்: குணாட்டியரின் பிருகத்கதா (பைசாச மொழி)
- சமண சமயக்காப்பியம்
- ஆறு காண்டங்கள்
கம்பராமாயணம்
- ஆசிரியர்: கம்பர்
- காலம்: கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
- வான்மீகி இயற்றிய இராமாயணத்தை தழுவி எழுதப்பட்டது
- கம்பர் இட்ட பெயர்: இராமாவதாரம்
- ஆறு காண்டங்கள்: பாலகாண்டம், அயோத்திய காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்
- 118 படலங்கள்
- உத்தர காண்டம் (ஏழாவது காண்டம்): ஒட்டக்கூத்தர் எழுதியது
சிறப்பு
"தமிழுக்கு கதி" = கம்பராமாயணம் + திருக்குறள்
— திருமணம் செல்வ கேசவராயர்
பெரியபுராணம்
- மற்ற பெயர்: திருத்தொண்டர் புராணம்
- ஆசிரியர்: சேக்கிழார் (இயற்பெயர்: அருண்மொழித் தேவர்)
- சேக்கிழார் இட்ட பெயர்: திருத்தொண்டர் மாக்கதை
- சைவக் காப்பியம்
- 63 அடியார் பெருமக்கள் பற்றியது
- சைவத்திருமுறைகளுள் பன்னிரண்டாம் திருமுறை
அமைப்பு
- இரண்டு காண்டங்கள் (பெரும் பிரிவு)
- 13 சருக்கங்கள் (உட்பிரிவு)
மூல நூல்கள்
- சுந்தரர்: 'திருத்தொண்டத்தொகை'
- நம்பியாண்டார் நம்பி: 'திருத்தொண்டர் திருவந்தாதி'
சிறப்புகள்
- தேசிய இலக்கியம்
- ஆண், பெண் வேறுபாடின்றி பல இனங்களையும், தொழில் பிரிவுகளையும் சார்ந்த சிவனடியார்களை பற்றியது
- காப்பிய தலைவர்: சுந்தரர்
இருபதாம் நூற்றாண்டு காப்பியங்கள்
பழங்காப்பிய மரபு
பாரதியின் காப்பியங்கள்:
- பாஞ்சாலி சபதம்
- குயில்பாட்டு
பாரதிதாசனின் காப்பியங்கள்:
- பாண்டியன் பரிசு
- புரட்சிக்கவி
- வீரத்தாய்
பிற காப்பியங்கள்:
- கவிமணி தேசிக விநாயகம்: மருமக்கள் வழி மான்மியம்
- கண்ணதாசன்: ஆட்டனத்தி ஆதிமந்தி, **இயேசு காவியம், மாங்கனி
- முடியரசன்: பூங்கொடி, வீரகாவியம்
- கவியோகி சுத்தானந்த பாரதி: பாரதசக்தி மகாகாவியம்
- சாலை இளந்திரையன்: சிலம்பின் சிறுநகை
- புலவர் குழந்தை: இராவண காவியம்
புதுக்கவிதை வடிவ காப்பியங்கள்
- வைரமுத்து: கவிராஜன் கதை (பாரதியின் வாழ்க்கை வரலாறு)
- கவிஞர் வாலி:
- அவதார புருஷன் (இராமாயணம்)
- பாண்டவர் பூமி (மகாபாரதம்)