அறவியல் இலக்கியங்கள்
- உலகிற்கு அறம் கூறும் நோக்கோடு எழுந்த இலக்கியங்களை அறவிலக்கியங்கள் என்றும், அறங்கூர் கவிதைகளை அறக்கவிதைகள் என்றும் குறிப்பிடுவர்
- காலம்: கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள்:
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு
வகைப்பாடு:
- அறம்: பதினொன்று
- அகம்: ஆறு
- புறம்: ஒன்று
பதினென்கீழ்கணக்கு நூல் பட்டியல்
|
நூல் |
ஆசிரியர் |
|
திருக்குறள் |
திருவள்ளுவர் |
|
நாலடியார் |
சமணமுனிவர்கள் |
|
நான்மணிக்கடிகை |
விளம்பிநாகனார் |
|
இன்னாநாற்பது |
கபிலர் |
|
ஆசாரக்கோவை |
பெருவாயின்முள்ளியார் |
|
பழமொழிநானூறு |
முன்றுறைஅரையனார் |
|
சிறுபஞ்சமூலம் |
காரியாசான் |
|
ஏலாதி |
கணிமேதாவியார் |
|
இனியவைநாற்பது |
பூதஞ்சேந்தனார் |
|
திரிகடுகம் |
நல்லாதனார் |
|
முதுமொழிக்காஞ்சி |
கூடலூர்க்கிழார் |
களவழி நாற்பது
-
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்
புறப்பொருள் சார்ந்த ஒரே நூல் - களம்: ஏர்க்களம், போர்க்களம்
- ஆசிரியர்: பொய்கையார்
- சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டதால் அவனை மீட்க பாடப்பட்டது
- சிறப்பு: இதிலுள்ள ஒவ்வொரு பாடலின் இறுதி சொல்லும் 'அட்டக்களத்து' என்று முடிவது
- பரணி என்ற சிற்றிலக்கிய வகை தோற்றம் பெறுவதற்கு இந்நூலே காரணம்
ஒருமறை - திருக்குறள்
- மணிமுடியாக விளங்கும் திருக்குறள் உலகம் போற்றும் பொதுமறை
- முப்பால்: அறம், பொருள், இன்பம்
- விவிலியத்திற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது
- திருவள்ளுவர் பிறந்த ஆண்டு: கி.மு 31
இருநானூறு
நாலடியார்
- திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்கது
- மற்ற பெயர்கள்: நாலடி, நாலடி நானூறு, வேளாண்வேதம்
- சமணமுனிவர்களால் பாடப்பட்ட 400 வெண்பாக்களின் தொகுப்பு
- தொகுத்தவர்: பதுமனார்
இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை உலகத்துக்கும் யாம்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து
— நாலடியார் (கல்வியின் சிறப்பு)
பழமொழி நானூறு
- 400 வெண்பாக்களால் ஆனது
- ஆசிரியர்: முன்றுறை அரையனார்
- ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமைந்துள்ளது
நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்
கேடு பிறரோடு சூழ்தல் கிளர்மணி
நீடுகல் வெற்ப நினைப்பின்றித் தாமிருந்த
கோடு குறைத்து விடல்
— பழமொழி நானூறு
மும்மருந்து
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர்கள் கொண்ட மூன்று அறநூல்கள்:
1. திரிகடுகம்
- மூலிகைகள்: சுக்கு, மிளகு, திப்பிலி
- ஒவ்வொரு செய்யுளிலும் மூன்று கருத்துக்கள்
- 100 வெண்பாக்கள்
- ஆசிரியர்: நல்லாதனார்
2. சிறுபஞ்சமூலம்
- மூலிகைகள்: கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
- ஒவ்வொரு செய்யுளிலும் ஐந்து கருத்துக்கள்
- 102 வெண்பாக்கள்
- ஆசிரியர்: காரியாசான்
பொருள்போக மஞ்சாமை பொன்றுங்காற் போர்த்த
அருள்போகா வாரறமென் றைந்தும் இருள்தீரக்
கூறப்படும் குணத்தான் கூர்வேல்வல் வேந்தனால்
தேறப்படும் குணத்தி னான்
— சிறுபஞ்சமூலம்
3. ஏலாதி
- மூலிகைகள்: ஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு
- ஒவ்வொரு செய்யுளிலும் ஆறு கருத்துக்கள்
- 80 வெண்பாக்கள்
- ஆசிரியர்: கணிமேதாவியார்
நானாற்பது
நானாற்பது என்று அழைக்கப்படும் நான்கு நூல்கள்:
- இன்னா நாற்பது (அறநூல்) - கபிலர்
- இனியவை நாற்பது (அறநூல்) - பூதஞ்சேந்தனார்
- கார் நாற்பது (அகநூல்)
- களவழி நாற்பது (புறநூல்)
கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது
— இனியவை நாற்பது
மணிமொழிக்கோவை
மூன்று நூல்கள்:
1. நான்மணிக்கடிகை
- நான்கு அரிய கருத்துக்கள் ஒவ்வொரு செய்யுளிலும்
- 104 வெண்பாக்கள்
- ஆசிரியர்: விளம்பிநாகனார்
கள்வம் என்பார்க்கும் துயில்இல்லை காதலி மாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயில்இல்லை ஒண்பொருள்
செய்வம் என்பார்க்கும் துயில்இல்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்
— நான்மணிக்கடிகை
2. முதுமொழிக்காஞ்சி
- பல முதுமொழிகளைக் கோவையாக கொண்ட 100 வெண்பாக்கள்
- ஆசிரியர்: புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்
3. ஆசாரக்கோவை
- ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவையாக கொண்ட 100 வெண்பாக்கள்
- ஆசிரியர்: பெருவாயின் முள்ளியார்
பிற்கால நீதிநூல்கள்
|
நூல் |
ஆசிரியர் |
|
அருங்கலச் செப்பு |
பெயர் தெரியவில்லை |
|
கபிலரகவல் |
கபிலர் |
|
அறநெறிச்சாரம் |
முனைப்பாடியார் |
|
கொன்றை வேந்தன் |
ஒளவையார் |
|
நறுந்தொகை |
அதிவீரராம பாண்டியர் |
|
மூதுரை |
ஒளவையார் |
|
திநெறிவிளக்கம் |
குமரகுருபரர் |
|
நல்வழி |
ஒளவையார் |
|
நன்னெறி |
சிவப்பிரகாசர் |
|
நீதி சிந்தாமணி |
வேதகிரியார் |
|
உலகநீதி |
உலகநாதர் |
|
பெண்மதிமாலை |
வேதநாயகர் |
|
முதுமொழி வெண்பா |
பெயர் தெரியவில்லை |
|
நீதிநூல் |
வேதநாயகர் |
|
ஆத்திசூடி |
ஒளவையார் |
|
நீதிபேதம் |
வேதநாயகர் |
|
விவேக சிந்தாமணி |
பெயர் தெரியவில்லை |
|
புதிய ஆத்திசூடி |
பாரதியார் |
கபிலர் அகவல்
- காலம்: பதினைந்தாம் நூற்றாண்டு
- ஆசிரியர்: கபிலர்
ஒன்றே செய்யவும் வேண்டும் ஒன்றும்
நன்றே செய்யவும் வேண்டும் நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும் இன்றும்
இன்னே செய்யவும் வேண்டும்
— கபிலர் அகவல்
நறுந்தொகை
- ஆசிரியர்: அதிவீரராம பாண்டியர்
- அறக்கருத்துக்களை எடுத்துரைக்கும் ஓரடிப் பாக்கள்
எழுத்தறி வித்தவ னிறைவ னாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை
கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை
— நறுந்தொகை
விவேகசிந்தாமணி
ஆசாரஞ் செய்வா ராகி லறிவோடு புகழு முண்டாம்
ஆசாரம் நன்மை யானா லவனியிற் றேவ ராவார்
ஆசாரஞ் செய்யா ராகி லறிவொடு புகழு மற்றுப்
பேசார்போற் பேச்சு மாகிப் பிணியொடு நரகில் வீழ்வார்
— விவேகசிந்தாமணி