செவ்வியல் இலக்கியங்கள்
செவ்வியல் அறிமுகம்
- உலகளவில் 'செவ்வியல்' என்ற பொருளில் 'கிளாசிசம்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது
- இதன் மூலச்சொல்லாக 'கிளாசிகஸ்' என்ற இலத்தீன் சொல் உள்ளது
- தமிழில் செவ்வியல் என்பதன் மூலச்சொல் 'செம்மை' என்பதாகும்
- செம்மை: செப்பம், செவ்வை, செவ்வி, நற்சீரடைதல், ஒழுங்குபடுத்துதல், பண்படுத்துதல்
செவ்வியல் இலக்கியங்களின் காலகட்டம்
|
மொழி |
காலகட்டம் |
|
கிரேக்க மொழி |
கி.மு 5 ஆம் நூற்றாண்டு முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை |
|
இலத்தீன் மொழி |
கி.மு 1 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2 ஆம் நூற்றாண்டு வரை |
|
சீன மொழி |
கி.மு 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை |
|
சமஸ்கிருத மொழி |
கி.மு 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8 ஆம் நூற்றாண்டு வரை |
சங்க இலக்கியம்
- தமிழின் செவ்வியல் தன்மைக்கு சான்றாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன
- பதினெட்டு நூல்கள் = பாட்டு + தொகை (பதினெண்மேற்கணக்கு நூல்கள்)
- பாட்டு: பத்துப்பாட்டு
- தொகை: எட்டுத்தொகை
சங்கப்பாடல்கள் புள்ளிவிவரம்
- மொத்த பாடல்கள்: 2381
- அகத்திணைப்பாடல்கள்: 1862
- புறத்திணைப்பாடல்கள்: 519
- சங்கப்புலவர் எண்ணிக்கை: 473
- பெண்பாற் புலவர்கள்: 49
- குறிப்பிடத்தக்க புலவர்கள்:
- கணியன் பூங்குன்றனார்: 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் ஒரே பாடலால் உலகப்புகழ் பெற்றவர்
-
கபிலர்: 235 பாடல்களைப் பாடி முதலிடம்
சங்க இலக்கிய நூல்கள்
எட்டுத்தொகை
அகம்:
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- கலித்தொகை
- அகநானூறு
புறம்:
- பதிற்றுப்பத்து
- புறநானூறு
அகம், புறம்:
- பரிபாடல்
பத்துப்பாட்டு
அகம்:
- குறிஞ்சிப்பாட்டு
- முல்லைப்பாட்டு
- பட்டினப்பாலை
- நெடுநல்வாடை
புறம்:
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- பொரும்பாணாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- மலைபடுகடாம்
- மதுரைக்காஞ்சி
பழந்தமிழர் வாழ்வியல்
இயற்கை
சங்க இலக்கியக் காலத்தை 'இயற்கை நெறிக்காலம்' எனலாம்.
பைந்தினை யுணங்கல் செம்பூழ் கவரும்
வன்புல நாடற் றரீஇய வலனேர்
பங்க ணிருவிசும் பதிர வேறொடு
பெயறொ டங்கின்றே வானங்
காண்குவம் வம்மோ பூங்க ணோயே
— ஐங்குறுநூறு (ஆசிரியர்: பேயனார், திணை: முல்லை)
காதல்
பண்டையத் தமிழ்மக்களின் அன்புள்ளத்தோடு கலந்த ஓர் அகவுறுப்பாகவே புறவியற்கை விளங்கிற்று.
நிலம் தொட்டு புகாஅர் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே
— குறுந்தொகை (ஆசிரியர்: வெள்ளி வீதியார், திணை: பாலை)
பிரிவாற்றாமை
- களவொழுக்கம்: திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வு
- கற்பொழுக்கம்: திருமணத்திற்கு பிறகான இல்லற வாழ்வு
யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கை விடு பசும் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே
— குறுந்தொகை (ஆசிரியர்: மீனெறிதூண்டிலார், திணை: பாலை)
விளையாட்டு
தொல்காப்பியர் கூறும் உவகை என்னும் மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய நால்வகை களங்களுள் ஒன்று விளையாட்டு.
விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந் திருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என
குறுநுரை சுமந்து நறுமலர் உந்தி
— நற்றிணை (ஆசிரியர்: பிரான்சாத்தனார், திணை: குறிஞ்சி)
ஓரையாடுதல்
- ஓரை: சங்ககால இளம் மகளிர் விளையாடிய விளையாட்டு
- பொருள்: ஒலி எழுப்புதல்
- ஆரவாரம் எழுமாறு ஆடப்படும் ஆட்டங்கள்
கொடை
பொருநராற்றுப்படையில் கரிகால் பெருவளத்தானின் கொடைச்சிறப்பை முடத்தாமக்கண்ணியார் பாடல் மூலம் புலப்படுத்துகிறார்.
அரசியல்
- இயற்கை அல்லது செயற்கை காரணங்களால் மக்களுக்குத் தீங்கு நேரினும் மன்னனே அதற்கு பொறுப்பேற்றான்
- தன் குடிகளையும், படைகளையும் காத்து நிற்க வேண்டியது அரசனது கடமை
யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் எனவினவுதிர் ஆயின்
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே
— புறநானூறு (ஆசிரியர்: பிசிராந்தையார், திணை: பொதுவியல், துறை: பொருண்மொழிக்காஞ்சி)
கையறுநிலை
தம் மன்னன் இறந்ததற்கு குடிமக்களும் சான்றோரும் வீரர்களும் வருந்திப் பாடுவது கையறுநிலை என்னும் துறையாகும்.
இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே
— புறநானூறு (ஆசிரியர்: குடவாயிற் கீரத்தனார், திணை: பொதுவியல், துறை: கையறுநிலை)
வணிகம்
தமிழர் கடல்கடந்து, அயல்நாடுகளிலும் வணிகம் செய்தனர்.
வணிக வகைகள்
- உள்நாட்டு வணிகம்: நிலம் சார்ந்த பொருள்களும் தொழில்களும்
- அயல்நாட்டு வணிகம்: இயற்கைப் பொருள்கள், கைவினைப் பொருள்கள், பருத்தி, பட்டாலான ஆடைகள்
நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டி துவன்று இருக்கை
— பட்டினப்பாலை
வீரம்
- சங்க காலத்தில் வீரம் முதன்மையாக போற்றப்பெற்றது
- போரில் புறமுதுகிடுதல் பெரும்பழியாக கருதப்பட்டது
- போரில் விழுப்புண்பட்டு உயிர் விடுவதை பெருமையாக கருதினர்
- புறப்புண் பெற்றவர்கள் வடக்கிலிருந்து உயிர்நீத்தலை புகழெனக் கருதினர்
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களிஇயல் யானைக் கரிகால் வளவ
சென்று அமர்க்கடந்த நின்ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே
— புறநானூறு (ஆசிரியர்: வெண்ணிக்குயத்தியார், திணை: வாகை, துறை: அரசவாகை)