கவிதையியல்
இலக்கிய வடிவங்கள்
- கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற நான்கும் இலக்கிய வடிவங்களாக உள்ளன.
- கவிதை: படைப்பாளன் தன் கருத்துகளை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம்
- நாடகம்: பேசுபவர், எதிர் வினையாற்றுபவர் ஆகிய இருவருக்குமான உரையாடல் வடிவம்
- கதை: படைப்பாளரே அனைத்து பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம்
- கட்டுரை: படைப்பாளன் தன் கருத்துகளை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம்
தொல்காப்பியம்
தமிழின் தொல்லிலக்கணமான தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் ஐவகை இலக்கணங்களைக் கூறுகிறது:
1. எழுத்ததிகாரம்
- எழுத்துக்களின் ஒலி மற்றும் வரிவடிவங்களின் தோற்றம், வகை, அளவு
- எழுத்துக்கள் சொல்லாக மாறுதல்
- சொற்கள் புணர்தல் போன்றவை விளக்கப்படுகின்றன
2. சொல்லதிகாரம்
- சொற்களின் வகை
- உருபுகள்
- சொற்கள் இணைந்து தொடராக மாறுதல் போன்றவை விளக்கப்படுகின்றன
3. பொருளதிகாரம்
- நேர்ப்பொருள் தரும் சொற்றொடர் பற்றிப் பேசாமல் புனைவாக உருவாக்கப்படும் சொற்றொடர்களின் மொழியையும் அதன் பொருளையும் பேசுகின்றது
செய்யுளியல்
- ஒரு பாவின் உறுப்புகள் 34 என வரையறை செய்துள்ள தொல்காப்பியம் அடிகளின் அளவு, அடிவரையறை, உண்டாக்கப்படும் ஒலி அளவு போன்றவற்றையும் விரிவாக பேசுகிறது
- புறவடிவத்தில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் பாக்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என வகைப்படுத்தப்படுகின்றன
"பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முது சொல்லொடு அவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர்தண் மொழில் வரைப்பின்
நற்போர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர்"
— தொல்காப்பியம்
கவிதையியல் (Poetics)
- செய்யுளியல் தொல்காப்பியர் போன்றே உலக அளவில் இலக்கிய வாசிப்பிற்கு வழிகாட்டும் நூலான கவிதையியலை (poetics) எழுதியவர் அரிஸ்டாட்டில்
பாவின் மூன்று கூறுகள்
- முதற்பொருள்
- கருப்பொருள்
- உரிப்பொருள் (மிக முக்கியமானது)
"முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறை சிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடும் காலை"
— தொல்காப்பியம்
புற இலக்கியம்
- புற இலக்கியத்தில் கவிஞர் கேட்பவர் தம் எதிரே இருப்பதாக நினைத்துக்கொண்டு தம் கருத்துகளை கூறுகிறார்
- உதாரணம: கணியன் பூங்குன்றனாரின் 'யாதுன் ஊரே யாவரும் கேளிர்'