எழுத்தாளர் சி.மணி
சி.மணி தமிழ் இலக்கியத்தில் புதுக்கவிதை இயக்கத்தில் முக்கியமான கவிஞர். 1959 முதல் "எழுத்து" இதழில் கவிதைகள் எழுதினார்.
நூல்கள்
- யாப்பும் கவிதையும் – இலக்கண நூல்
- வரும் போகும் – கவிதைத் தொகுப்பு
- ஒளிச்சேர்க்கை – கவிதைத் தொகுப்பு
- தாவோ தே ஜிங் – சீன மெய்யியல் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு
- இதுவரை – கவிதைத் தொகுப்பு
இதழ்கள்
சி.மணி "நடை" என்ற சிற்றிதழை நடத்தினார். 1959 முதல் "எழுத்து" இதழில் கவிதைகளை வெளியிட்டார்.
புனைப்பெயர்கள்
- வே.மாலி
- செல்வம்
சிறப்பியல்புகள்
- ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றினார்.
- புதுக்கவிதையில் அங்கதம் (நையாண்டி) மிகுதியாக பயன்படுத்தினார்.
- இருத்தலின் வெறுமையை சிரிப்பும் கசப்புமாக வெளிப்படுத்தினார்.
விருது
சி.மணிக்கு விளக்கு இலக்கிய விருது வழங்கப்பட்டது.