திருக்குறள்
அணிகள்
குறள்:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
இக்குறளில் பயின்று வந்துள்ள அணி - நிரல்நிறை அணி
குறள்:
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்
இக்குறளில் பயின்று வந்துள்ள அணி - ஏகதேச உருவக அணி
திருக்குறள் பற்றிய குறிப்புகள்
- திருக்குறள் குறள் வெண்பாக்களால் அமைந்த நூலாகும்
- ஏட்டுச் சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
பாரதியாரின் பாராட்டு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
பாரதிதாசனின் பாராட்டு
வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே
திருக்குறளின் அமைப்பு
அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
இயல்கள்:
- பாயிரவியல் - 04
- இல்லறவியல் - 20
- துறவறவியல் - 13
- ஊழியல் - 01
பொருட்பால் - 70 அதிகாரங்கள்
இயல்கள்:
- அரசு இயல் - 25
- அமைச்சு இயல் - 32
- ஒழிபியல் - 13
இன்பத்துப்பால் - 25 அதிகாரங்கள்
இயல்கள்:
- களவியல் - 07
- கற்பியல் - 18
மொத்த அமைப்பு
திருக்குறள் 9 இயல்கள், 133 அதிகாரங்கள், 1330 குறள்கள் கொண்டது.
நினைவுச் சின்னங்கள்
- தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை, கன்னியாகுமரியில் நிறுவியுள்ளது
- வேலூரில் திருவள்ளுவர்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது