மின்னோட்டம் (Electricity)
மின்னோட்டம் என்பது எலக்ட்ரான்களின் ஒழுங்கான ஓட்டம். இது ஆம்பியர் அலகில் அளவிடப்படும். மின் சர்க்யூட்டில் மின்னோட்டம் மின்தடை, மின்னழுத்தம் ஆகியவற்றோடு தொடர்பு படும்.
முக்கிய அளவுகள் மற்றும் சூத்திரங்கள்
| அளவு | சின்னம் | அலகு | சூத்திரம் |
|---|---|---|---|
| மின்னோட்டம் | I | ஆம்பியர் (A) | I = Q/t |
| மின்னழுத்தம் | V | வோல்ட் (V) | V = W/Q |
| மின்தடை | R | ஓம் (Ω) | R = V/I |
| மின் திறன் | P | வாட் (W) | P = VI = I²R |
ஓமின் விதி (Ohm's Law)
V = IR — மின்னழுத்தம் (V) = மின்னோட்டம் (I) × மின்தடை (R). வெப்பநிலை மாறாமல் இருந்தால் ஒரு கடத்தியில் மின்னழுத்தமும் மின்னோட்டமும் நேர்விகிதத்தில் இருக்கும்.
சேர்க்கை முறைகள்
- தொடர் சேர்க்கை (Series): R = R1 + R2 + R3 (தடை கூடும்)
- இணை சேர்க்கை (Parallel): 1/R = 1/R1 + 1/R2 + 1/R3 (தடை குறையும்)
மின் சக்தி மற்றும் வெப்பம்
ஜூல் விதி: H = I²Rt — மின்னோட்டம் கடத்தும்போது உருவாகும் வெப்பம். மின் ஆற்றல் = P × t (வாட் × மணி நேரம்). வீட்டு மின் சர்க்யூட்டில் இணை சேர்க்கை பயன்படும்.