தேம்பாவணி
ஆசிரியர்: வீரமாமுனிவர் (கொஸ்தாந்திணு யோசேப்பு பெஸ்கி)
வீரமாமுனிவர் - வாழ்க்கை வரலாறு
இத்தாலி நாட்டினர். ஜெசுயிட் கிறிஸ்தவ துறவி. 1680-ல் பிறந்தார். 1700-ல் இந்தியாவிற்கு வந்தார். தமிழை ஆழமாகக் கற்று அதில் தேர்ச்சி பெற்றார். 1747-ல் இறந்தார்.
தேம்பாவணி - சிறப்பு
தேம்பாவணி தமிழின் மிகப்பெரிய கிறிஸ்தவ காப்பியம். இது திருவரன் (செயிண்ட் ஜோசப்), மரியாள் மற்றும் இயேசுவின் கதையை தமிழ் காப்பிய வடிவில் சொல்கிறது. 18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
தாயின் அன்பு - பகுதி
பசுந்தங்கம், புதுவெள்ளி, மாணிக்கம், மணிவடம் யாவும் ஒரு தாய்க்கு ஈடில்லை என்கிறார் ஒரு கவிஞர். தாயின் அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது; தாயையிழந்து தனித்துறும் துயரம் பெரிது.
துயரத்தைப் பகிர்தல்
மகிழ்ச்சியைப் பகிர்ந்தால் பெருகும்; துயரைப் பகிர்ந்தால் குறையும். சுமையாராயினும் சொல்லி அழு என்பார்களல்லவா?
"துயரத்தை தாங்கிக்கொள்ளும் மனங்கள் மனிதத்தின் முகவரிகள்!"
கிறிஸ்தவ மிஷனரிகளின் தமிழ் பங்களிப்பு
வீரமாமுனிவர் போன்ற மிஷனரிகள் தமிழ் இலக்கியத்திற்கு அரும்பங்காற்றினர். தேம்பாவணி மட்டுமின்றி இலக்கண நூல்களும் அகராதிகளும் எழுதினர்.