அகப்பொருள் இலக்கணம்
- பொருள் என்பது ஒழுக்க முறை.
- தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை அகம், புறம் என வகுத்தார்கள். இதனைப் பொருள் இலக்கணம் விளக்குகிறது.
- அன்புடைய தலைவன், தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது - அகத்திணை
- குற்ஞ்சி, முல்லை, மருத, நெய்தல், பாலை என்பன அன்பின் ஐந்திணைகளாகும்.
- முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியன ஐந்திணைகளுக்கு உரியன.
- நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.
ஐவகை நிலங்கள்
|
திணை |
நிலம் |
|
குறிஞ்சி |
மலையும் மலை சார்ந்த இடமும் |
|
முல்லை |
காடும் காடு சார்ந்த இடமும் |
|
மருதம் |
வயலும் வயல் சார்ந்த இடமும் |
|
நெய்தல் |
கடலும் கடல் சார்ந்த இடமும் |
|
பாலை |
சுரமும் சுரம் சார்ந்த இடமும் |
பொழுது
பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.
ஓராண்டின் ஆறு கூறுகளைப் பெரும்பொழுது என்று நம் முன்னோர் பிரித்துள்ளனர்.
பெரும்பொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்)
|
பொழுது |
தமிழ் மாதங்கள் |
|
கார்காலம் |
ஆவணி, புரட்டாசி |
|
குளிர் காலம் |
ஐப்பசி, கார்த்திகை |
|
முன்பனிக் காலம் |
மார்கழி, தை |
|
பின்பனிக் காலம் |
மாசி, பங்குனி |
|
இளவேனிற் காலம் |
சித்திரை, வைகாசி |
|
முதுவேனிற் காலம் |
ஆனி, ஆடி |
சிறுபொழுது (ஒரு நாளின் ஆறு கூறுகள்)
|
பொழுது |
நேரம் |
|
காலை |
காலை 6 மணி முதல் 10 மணி வரை |
|
நண்பகல் |
காலை 10 மணி முதல் 2 மணி வரை |
|
எற்பாடு |
பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை |
|
மாலை |
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை |
|
யாமம் |
இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை |
|
வைகறை |
இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை |
குறிப்பு:
- 'எல்' என்றால் ஞாயிறு
- 'பாடு' என்றால் மறையும் நேரம்
- எல் + பாடு = எற்பாடு (சூரியன் மறையும் நேரம்)
திணையும் பொழுதும்
|
திணை |
பெரும்பொழுது |
சிறுபொழுது |
|
குறிஞ்சி |
குளிர்காலம், முன்பனிக்காலம் |
யாமம் |
|
முல்லை |
கார்காலம் |
மாலை |
|
மருதம் |
ஆறு பெரும்பொழுதுகள் |
வைகறை |
|
நெய்தல் |
ஆறு பெரும்பொழுதுகள் |
எற்பாடு |
|
பாலை |
இளவேனில், முதுவேனில், பின்பனி |
நண்பகல் |
கருப்பொருள்கள்
ஓரு நிலத்திற்குரிய தெய்வம், மக்கள், தொழில், விலங்கு இவையெல்லாம் கருப்பொருள்கள் ஆகும்.
குறிஞ்சித் திணைக்குரியக் கருப்பொருள்கள்
- தெய்வம்: சேயோன்
- மக்கள்: பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி, குறவர், குறத்தியர், கானவர்
- புள் (அ) பறவை: கிளி, மயில்
- விலங்கு: சிங்கம், புலி, கரடி, யானை
- ஊர்: சிறுகுடி
- நீர்: அருவி நீர், சுனை நீர்
- பூ: வங்கை, காந்தள், குறிஞ்சி
- மரம்: சந்தனம், தேக்கு, அகில், மூங்கில்
- உணவு: மலைநெல், தினை, மூங்கிலரிசி
- பறை: தொண்டகப் பறை
- யாழ்: குறிஞ்சி யாழ்
- பண்: குறிஞ்சிப் பண்
- தொழில்: வெறியாடல், மலை நெல் விதைத்தல், தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்
முல்லைத் திணைக்குரியக் கருப்பொருள்கள்
- தெய்வம்: மாயோன்
- மக்கள்: குறும்பொறை, நாடன், தோன்றல், கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
- புள் (அ) பறவை: காட்டுக்கோழி
- விலங்கு: மான், முயல்
- ஊர்: பாடி
- நீர்: குறுஞ்சுனை, கானறு
- பூ: முல்லை, பிடவம், தோன்றி
- மரம்: கொன்றை, காயா, குருந்தம்
- உணவு: வரகு, சாமை, முதிரை
- பறை: ஏறுகோட்பறை
- யாழ்: முல்லை யாழ்
- பண்: முல்லைப் பண்
- தொழில்: சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், அரிதல்
மருதத் திணைக்குரியக் கருப்பொருள்கள்
- தெய்வம்: வேந்தன் (இந்திரன்)
- மக்கள்: ஊரன், மகிழ்நன், மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
- புள் (அ) பறவை: நாரை, மகன்றில், அன்னம்
- விலங்கு: எருமை, நீர்நாய்
- ஊர்: பேரூர், மூதூர்
- நீர்: ஆற்று நீர், கிணற்று நீர், குளத்து நீர்
- பூ: தாமரை, குவளை
- மரம்: மருதம், வஞ்சி, காஞ்சி
- உணவு: செந்நெல், வெண்ணெல்
- பறை: நெல்லரிகிணை, மணமுழவு
- யாழ்: மருத யாழ்
- பண்: மருதப் பண்
- தொழில்: வயலில் களைகட்டல், நெல்லரிதல்
நெய்தல் திணைக்குரியக் கருப்பொருள்கள்
- தெய்வம்: வருணன்
- மக்கள்: சேர்ப்பன், புலம்பன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர்
- புள் (அ) பறவை: கடற்காகம்
- விலங்கு: சுறாமீன்
- ஊர்: பாக்கம், பட்டினம்
- நீர்: உவர் நீர்க் கேணி, சுவர் நீர்க் கேணி
- பூ: நெய்தல், தாழை
- மரம்: புன்னை, ஞாழல்
- உணவு: உப்பும் மீனும் விற்றுப் பெற்ற பொருள்
- பறை: மீன்கோட்பறை, நாவாய்ப் பம்பை
- யாழ்: விளரியாழ்
- பண்: செவ்வழிப் பண்
- தொழில்: உப்பு உண்டாக்கல், விற்றல், மீன் பிடித்தல்
பாலைத் திணைக்குரியக் கருப்பொருள்கள்
- தெய்வம்: கொற்றவை
- மக்கள்: விடலை, மீளி, எயிற்றி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்
- புள் (அ) பறவை: புறா, பருந்து, கழுகு
- விலங்கு: செந்நாய்
- ஊர்: குறும்பு
- நீர்: நீரில்லாக் குழி, கிணறு
- பூ: குராஅம்பூ, மராம்பூ
- மரம்: பாலை, உழிஞை, ஓமை
- உணவு: வழியிற் பறித்த பொருள்
- பறை: துடி
- யாழ்: பாலையாழ்
- பண்: பஞ்சுரப் பண்
- தொழில்: போர் செய்தல், சூறையாடல்
பொதுக்குறிப்புகள்
- குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் - குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
- கோசல நாட்டில் கொடை இல்லாததன் காரணம் - அங்கு வறுமை இல்லாமை
- கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்.
- 'கோல்டு பிஸ்கட்' என்பதன் தமிழ்மொழிச் சொல் - 'தங்கக் கட்டி'
நூல்களும் ஆசிரியர்களும்
- தேன்மழை - சுரதா
- திருக்குறள் நீதி இலக்கியம் - க.த.திருநாவுக்கரசு
- நாட்டார் கலைகள் - அ.கா.பெருமாள்