சிறு தெய்வ வழிபாடு
ஆசிரியர்: ச. கணபதிராமன்
தெய்வ வழிபாட்டின் தோற்றம்
சிறு தெய்வ வழிபாட்டின் தோற்றம் பழம் பொருளாகவே உள்ளது. உணவுப் பொருள்களை மட்டுமே தேடி வாழ்ந்த பழங்கால மனிதனுக்கு மனம் என்று விழிப்புணர்வு கொண்டதோ அன்று முதல் அவனுக்கு இறை நாட்டம் தொடங்கிவிட்டது எனலாம். இயற்கையோடு இயைந்து இயற்கையினின்று தன் தேவைகளைப் பெற்று வாழ்ந்த மனிதன் விழிப்புணர்வு பெற்றும் இயற்கையை உற்று நோக்கத் தலைப்பட்டான்.
அப்போது அவன் வியப்பையும், மகிழ்வையும், நன்றியுணர்வையும் பெற்றான். தன்னை வாழ்விக்கும் இயற்கையை வாழ்த்தத் தலைப்பட்டான். நீரையும், மலையையும், ஞாயிற்றையும் தனது வாழ்வுக்குத் துணையாகும் பிற இயற்கைச் சக்திகளையும் உள்ளத்தின் நிறைவோடு எண்ணிப் பார்த்தான். உள்ள நிறைவோடு தன்னை வாழ்விக்கும் இயற்கையை எண்ணிப் பார்த்த மனிதன் அந்த இயற்கையால் வரும் பாதிப்பையும் மரணத்தையும் அறிந்து தனக்குள் போராடினான். தன் ஆற்றலுக்கு மீறிய ஏதோ ஒரு பேராற்றல் தன்னை ஆட்டுவிப்பதை உணர்வு மூலமாகவும் பட்டறிவு மூலமாகவும் தெரிந்த மனிதன் அமைதி வேண்டி அந்தப் பேராற்றலிடமே அடைக்கலம் புகுந்தான். அதனையே மனிதன் அறிந்த தெய்வ வழிபாடு என்று சொல்லலாம்.
தொல்காப்பியத்தில் தெய்வங்கள்
அச்சம், போராட்டம், நன்றியுணர்வு முதலியனவற்றின் அடிப்படையில் மனிதன் உருவாக்கிக் கொண்ட கடவுட் கொள்கை தமிழ்ச் சமுதாய அளவிலும் தோன்றி வளர்ந்து இன்றியமையாத் தன்மையும் பெறுவதாயிற்று. தெய்வத்தைத் தொல்காப்பியம் கருப்பொருட்களின் வரிசையில் முன்னதாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
| திணை | தெய்வம் |
|---|---|
| முல்லை (காடு) | மாயோன் (திருமால்) |
| குறிஞ்சி (மலை) | சேயோன் (முருகன்) |
| மருதம் (வயல்) | வேந்தன் (இந்திரன்) |
| நெய்தல் (கடல்) | வருணன் |
இவற்றிற்குக் கடவுளர் முறையே மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகியோராவர். பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போலவே அந்தந்த நிலங்களுக்குரிய தெய்வங்களையும் அவ்வளவற்றிலிருந்து பிரிக்க இயலாதவாறு அமைத்துள்ளனர். நிலத்திற்கேற்ற தொழிலும் உணவும் இயற்கையாக அமைவது போலவே அந்நிலத்துத் தெய்வ வழிபாடும் இயல்பாக அமைந்துள்ளது.
சங்க இலக்கியங்களில் தெய்வங்கள்
தொல்காப்பியம் குறிப்பிடும் நான்கு திணைத் தெய்வங்களும் கொற்றவையும் முன்னதாக வைத்திருப்பதுடன் சங்க இலக்கியங்கள் பல்வேறு தெய்வங்களைக் குறிக்கின்றன. முக்கட்செல்வன், நான்முகன், மழுவாள் நெடியோன், இராமன், சூரர மகளிர், கொல்லிப்பாவை, வானரமகளிர், சூர், அணங்கு, கள்ளி நீழற்கடவுள், கந்திற்பாவை, மராஅத்தபேரமுதிர் கடவுள் முதலிய பல்வேறு தெய்வங்களைச் சங்க நூல்களில் காணலாம்.
சங்க காலத்தைச் சார்ந்த காப்பிய காலத்தில் இன்னும் பற்பல தெய்வங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஊர்க்காவல் தெய்வங்களின் பெயர்களும் நகரக் காவல் தெய்வங்களின் பெயர்களும் சொல்லப்படுகின்றன. மதுரை, புகார் நகரங்களின் காவல் தெய்வங்களின் மகிமை பற்றிய செய்திகளை இலக்கியங்களால் அறிய முடிகிறது.
சங்க இலக்கிய காலத்தில் வழிபாட்டு முறைகள்
குறிஞ்சி நில மக்களாகிய குறவர்கள், மலை கிழவோனாகிய முருகனுக்குத் தேனும், தினையும் படைத்தனர். வெறியாடி விழாக் கொண்டாடினர். குறத்தியர் குன்றக்குரவையாடினர். விழாக் காலங்களில் தங்களை ஒப்பனை செய்துகொண்டனர். நோரால் நோரப் பதற்காகப் பூசாரி கையில் சிவந்த நூலைக் கட்டிக்கொள்வான்.
முல்லை நில மக்களாகிய ஆயர் அவர்களது உணவாகிய பால், தயிர், வெண்ணெய் ஆகியனவற்றை மாயோனுக்குப் படைப்பர். தமக்குத் துன்பம் வந்த காலத்து ஆயர் குல மகளிர் தம்முள் கைகோத்துக் குரவைக் கூத்தாடுவர்.
பாலை நில மக்கள் கொற்றவையை வழிபட்டனர். 'கொற்றி' என இவர்களைக் குறிப்பிட்டுக் கையில் காப்புக் கட்டி நோர்ம்பிருந்து வழிபட்டனர். மருத நில மக்கள் இந்திரனை வழிபட்டனர். இந்திர வழிபாடு சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் விரிவாகப் பேசு பெற்றுள்ளது.
சிறுதெய்வம் – பெருந்தெய்வம் – பாகுபாடு
சங்ககாலத்தையடுத்துத் தமிழகத்தில் சமயகாலம் உருவாகியது. சமணமும், சாக்கியமும் புதிய கொள்கைகளைக் கொண்டிருந்ததால், அவற்றிற்கேற்பச் சைவ, வைணவக் கோட்பாடுகள் மாற்றியமைக்கப் பெற்றன. மாயோனாகிய திருமால் விஷ்ணுவாகக் கருதப் பெற்றான். முக்கட் செல்வனாகிய சிவன் ஆலமர் செல்வனானான், சேயோன் முக்கட்செல்வ கிழவன் சுப்பிரமணியனாயினான்.
ஆலமர் செல்வனும், விஷ்ணுவும் முழு முதற் கடவுளாயினர். இம்முழு முதற் கடவுள் வழிபாடே சிறப்புடையதாகவும் பண்பட்டதாகவும் கருதப் பெற்றது. பிற தெய்வ வழிபாடுகள் சிறு தெய்வ வழிபாடுகளாக ஒதுக்கப் பெற்றன.
பெருந்தெய்வ வழிபாடு முதன்மை பெற்ற நிலை
தெய்வங்களை வழிபடுவதற்கு முறைகள் வகுக்கப் பெற்றன. ஆகம விதிகள் உருவாயின பெருங்கோயில்கள் எடுப்பிக்கப் பெற்றன. கோச்செங்கட் சோழன் 'எண்தோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது' சமைத்தான். இம்மன்னன் சமைத்த கோயில் சமைக்கத் தொடங்கிய தமிழகத்தில் சமைக்கத் தொடங்கிய பெருங்கோயில்கள் மன்னர்களாலும் மன்னர்களின் மனைவியராலும் படைத்தலைவர்களாலும் எழுப்பப் பெற்றன. கோயில்களை அருளாளர்கள் பாமாலை சூட்டிப் பரவினர். தமிழகத்தில் தேவராங்களும், பாசுரங்களும் எழுந்தன. சாத்திர தோத்திரங்களும் தோன்றினன.
பெரும்தெய்வக் கோயில்கள் கூடக் கால வெள்ளத்தில் அழிந்துவிட்டன. கோச்செங்கணான் கட்டிய எழுபது கோயில்களும் இன்றில்லை, மதுராபுரித் தெய்வத்தின் கோயிலும் சம்பாதிக் கோயிலும் இருந்த சுவடுகளே தெரியாவண்ணம் அழிந்துவிட்டன. ஆனால் சிறு தெய்வ வழிபாட்டுக் கோயில்கள் இன்றும் அழிந்துவிடாமல் காக்கப் பெற்று வருகின்றன. சிறு தெய்வ வழிபாடு முறைகள் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையிலும், சிறு தெய்வ வழிபாட்டினர் அவற்றைப் போற்றி வருவதோடு, அவற்றைச் சார்ந்த கலைகளையும் பேணி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு தெய்வங்கள் – வகைகள்
- குலதெய்வம் – குடும்பம் அல்லது குலம் வழிவழியாக வழிபடும் தெய்வம்
- காவல் தெய்வம் – ஊர், நகர, நிலங்களைக் காக்கும் தெய்வம்
- கொற்றவை – வேட்டையாடும் போர்வீரர்கள் வழிபட்ட தெய்வம்
- முருகன் – குறிஞ்சி நில மக்களின் தெய்வம்; சேயோன் எனவும் அழைக்கப்படுவர்
- மாயோன் – முல்லை நில மக்களின் தெய்வம்; திருமால் எனவும் அழைக்கப்படுவர்