ஈழம் வழங்கும் தமிழ்
ஆசிரியர்கள்: சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன்
அறிமுகம்
ஈழநாட்டின் பேச்சுத் தமிழில் பல சிறப்பு இயல்புகள் உண்டு. தமிழகத்தில் நெல்லைத் தமிழ், தஞ்சைத் தமிழ், சென்னைத் தமிழ் என்று வேறுபாடுகள் இருப்பது போலவே, ஈழத்தில் யாழ்ப்பாணம், மட்டக்கிளப்பு, மலைநாடு ஆகிய பகுதிகளுக்குத் தனித்தனி இடமொழிகள் (Dialects) உண்டு. பொதுவாக ஈழத்துப் பேச்சுத் தமிழில் உள்ள சிறப்பு இயல்புகளை சில சொற்களைக் கொண்டு காணலாம்.
ஒலிப்புமுறை
ஈழத் தமிழரின் பேச்சுமுறையில் சிறிது மலையான ஒலிப்புமுறை கலந்திருக்கிறது. ஆகையால் தென்நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழும் தமிழர்களைப் போலவே ஈழத் தமிழர்கள் பல சொற்களை ஒலிக்கிறார்கள். மழை, 'மளை' யாகவும், பழம் 'பளம்' ஆகவும், ஜனங்கள் 'சனங்க'ளாகவும் தென் நெல்லைத் தமிழர் வாயில் தவழ்வதைப் பார்க்கலாம்.
ஆகார–ஓகார மாற்றம்
பொதுவாக, (மாலா, சீதா என்பன போன்ற) ஆகார ஈற்று வடமொழிச் சொற்களை, ஓகார ஈற்றுச் சொல்லாக்கி (மாலை, சீதை என்று) வழங்குவது தமிழ் மரபு. ஈழத்தார் அந்த மரபை ஏற்று, அண்ணாவை அண்ணையாக்கியும் 'பேனா' (Pen)வைப் பேனை ஆக்கியும் வழங்குகின்றார்கள். 'அம்மா' வை அம்மை என்றே சொல்லும் வழக்கம் தமிழகத்தில் சிலவிடங்களில் இன்றும் இருக்கிறது.
கீதம் படித்தல்
படித்தல், பாடுதல் என்னும் சொற்களுக்குப் பொருள் வேறுபாடு உண்டு. பாடம் படிக்கவேண்டும்; பாட்டுப் பாடவேண்டும். தென்தமிழகத்தில் பாட்டையும் படிக்கவே செய்வார்கள். 'நல்லாப் பாட்டுப் படிக்கிறாள்' என்றே சொல்லுவார்கள். இந்தச் சொல்வழக்கு பாரதியார் பாட்டிலேகூட ஒட்டிக்கொண்டது. 'தீரத விளையாட்டுப்பிள்ளை' என்று தொடங்கும் பாட்டில் 'அமுது, பொங்கித் ததும்பும் நற்கீதம் படிப்பான்' என்று பாரதியார் பாடுகிறார். ஈழமும் பாட்டைப் படிக்கப் பாடுவதில்லை; படிக்கிறது.
மரியாதை
தமிழகத்தில் சில இடங்களில் அம்மா, அக்கா, அண்ணன் முதலியவர்களை மரியாதையாக 'அவர்கள்' என்று குறிப்பார்கள். வேறு சிறு இடங்களில் தந்தை, மாமா முதலியவர்களக் கூட 'நீ' என்று ஒருமையில் (ஏகவசனத்தில்) குறிக்கும் வழக்கம் உள்ளது. ஈழத் தமிழர்கள் தங்கள் குழந்தைகளிடம் கூட 'மரியாதையாக', 'வாருங்கள், சொல்லுங்கள்' என்று பேசுகிறார்கள். இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை.
பிள்ளை
தென்தமிழகத்தாருக்கு ஆண் குழந்தையும் பிள்ளை தான்; பெண் குழந்தையும் பிள்ளை தான். ஆம்பிளைப் பிள்ளை, பொம்பளைப் பிள்ளை (ஆண்பிள்ளை, பெண்பிள்ளை) என்று அடுக்கிக் கூடச் சொல்லுவார்கள். ஈழத்தின் வழக்கம் இதுவே. பெண்ணெனைப் பெட்டை என்பது ஈழத்து வழக்கு. நெல்லை வழக்கும் இதுவே. ஆனால் சொல்லின் உருவம் 'பொட்டை' என்று மாறுகிறது. பாடம் வரைதல் என்பதைப் பாடம் போடுதல் என்றும் பாடம் கீறுதல் என்றும் ஈழத்தார் சொல்லுகிறார்கள்.
நல்ல சொற்கள்
ஈழத்தில் வழங்கும் நல்ல தமிழ்ச் சொற்கள், புதிய சொற்கள் சிலவற்றையும் குறிப்பிட வேண்டும். தயார் என்பதை 'ஆயத்தம்' என்றே சொல்லுகிறார்கள்; நோயை 'வருத்தம்' என்றும், முடிவு என்பதை 'முற்று' என்றும், கற்பித்தல் அல்லது சொல்லிக் கொடுத்தல் என்பதை 'படிப்பித்தல்' என்றும் சொல்லுகிறார்கள்.
ஈழத்துச் சொற்கள் – தமிழகச் சொற்கள் ஒப்பீடு
| ஈழத்துச் சொல் | தமிழகத்துச் சொல் / பொருள் |
|---|---|
| ஆயத்தம் | தயார் |
| வருத்தம் | நோய் |
| முற்று | முடிவு |
| படிப்பித்தல் | கற்பித்தல் |
| விட்பனவு | Rest House / வாடிவீடு |
| திணைக்களம் | Department (திபாசிட்) |
| முஸ்பாத்தி | வேடிக்கை (Mischief) |
| சந்தாலே | சந்து வழியே போவோம் (சந்தாலே போவோம்) |
| கோப்பன் | Coffee (தமிழகத்தில் 'காப்பி') |
| கந்தோர் | Office (அலுவலகம்) |
வேற்றுமைகள்
வினைமுடிபுகளிலும் வேற்றுமை உருபுகளைச் சேர்ப்பதிலும் கூடச் சில புதுமைகள் உண்டு. சந்து வழியே போவோம் என்பதைச் 'சந்தாலே' போவோம் என்கிறார்கள். ஒரு மாதத்தில் கிடைக்கும் என்பதை 'ஒரு மாதத்தால்' கிடைக்கும் என்கிறார்கள். வீட்டுக்குப் போவோம் என்பதை 'வீட்டைப் போவோம்' என்கிறார்கள். போவம் (போவோம்), கேட்டன் (கேட்டேன்) என்பவை சாதாரணம். கொடுத்தேன் என்பது 'கொடுத்தனான்' என்றும், கொடுத்தாய் என்பது 'கொடுத்தனி' என்றும், கொடுத்து அவன் என்பது 'கொடுத்த அவன்' என்றும் வழங்குவது புதுமையாக உள்ளது.
வரப்போகிறார்கள்!
ஒரு வீட்டுக்குப் போய் விடைபெற்றுக் கொள்ளும் போது, 'நான் வருகிறேன்' அல்லது 'போய் வருகிறேன்' என்று சொல்லுகிறோம். ஈழத்தில் 'வரப்போகிறேன்' என்று சொல்லுகிறார்கள். அவர்கள் 'வெளிக்கிடு'வதும் வரப்போவதும் வேடிக்கையாக இல்லை. இதுபோல், நம்முடைய பேச்சில் எது அவர்களுக்கு 'முஸ்பாத்தி' யாக இருக்கிறதோ!
கட்டுரையின் சிறப்புகள்
- ஈழத் தமிழ் தனித்த இடமொழி (Dialect) என்பதை சாலை, சாலினி இளந்திரையன் நிறுவுகின்றனர்.
- ஒலிப்புமுறை, சொல்லாட்சி, வினைமுடிபு ஆகியவற்றில் ஈழத் தமிழ் தமிழகத் தமிழிலிருந்து வேறுபடுகிறது.
- ஈழத் தமிழர் குழந்தைகளிடமும் மரியாதைப் பன்மையில் பேசும் தனிப்பட்ட வழக்கம் உடையவர்கள்.
- ஈழத்தில் தமிழக வழக்கு இல்லாத நல்ல தமிழ்ச் சொற்கள் இன்னும் வழக்கில் உள்ளன.
- 'வரப்போகிறார்கள்' என்னும் தலைப்பே ஈழத்தின் தனிச்சொல்லாட்சியை நகைச்சுவையாக விளக்குகிறது.