சித்திரக்கவியம் என்பது பல்வேறு இலக்கிய வகைகளில் ஒன்று. பந்தம், பந்தனம், சக்கரம், மாலை மாற்று, ஏகபாதம், பங்கி, கூட சதுர்த்தம், சதுரங்கம், சுழிகுளம், வினாவுத்தரம், கோமுத்திரி, அக்கரச் சுதகம் என இது பலவகைப்படும். இவ்வகைக் கவிகளில் தங்கள் நுட்ப மதியினைச் செலுத்திய புலவர்கள் உளர். இவ்விருபதோராம் நூற்றாண்டிலும் இவ்வகைக் கவிகளில் தமது மதிநுட்பத்தைச் செலுத்தியுள்ளவர்களில் கவிஞர் பொன்சிவம் ஒருவர்.
கவிஞர் பொன்சிவம் — அறிமுகம்
| விவரம் | தகவல் |
|---|---|
| இயற்பெயர் | க. பொன்னுசாமி |
| பிறந்த நாள் | 27.2.1938 |
| பிறந்த இடம் | திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், வெங்கடேஸ்வரபுரம் கிராமம் |
| பெற்றோர் | தந்தை: திரு மா. கந்தசாமி; தாய்: திருமதி ஐ. முத்தம்மாள் |
| துணைவியார் | திருமதி. பி. சிவகாமி |
| நூல் | காரவந்தபுரத்துக் காரிகை (இருநூறு பாடல்கள்) |
| சிறப்பு | இலக்கிய நுகர்ச்சியில் சிறப்புப் பெற்றுள்ளார்; காவியம் படைக்கும் வல்லமையும் பெற்றுள்ளார் |
கரவந்தபுரம் — சிறப்புகள்
கரவந்தபுரம் என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி வட்டத்தில் அமைந்துள்ள உக்கிரன் கோட்டை என்னும் ஊரின் வரலாற்றுப் பெயராகும். அவ்வூரை நிகழிடமாகக் கொண்டு கரவந்தபுரத்துக் காரிகை என்னும் நூலில் இருந்து காரைக்குடி மற்றும் பொதிகை பற்றிய பாடல்கள் எடுக்கப்பட்டுள்ளன.
பண்டைக்காலக் காப்பிய அமைப்பில் ஆக்கப்பட்டுள்ள இந்நூலில் ஐந்து காண்டங்களும் நாற்பது படலங்களும் உள்ளன. அதில் முதலாவதான மகிழ்ச்சிக் காண்டத்தில் 'புலவரவை கூடிய படல'த்தில் பாடமாக வந்துள்ள இவ்விரு செய்யுள்களும் அமைந்துள்ளன.
பாடல் 1 — காரைக்குடி: வினாவுத்தரம்
பூவிதனில் தண்புனலாய்க் கொட்டுவதை ஏதென்பார்?
பூவிதழ்நம் கண்மயக்கி ஈர்ப்பதெது? தாவிலா
மன்னிறையைச் சேர்ப்பவரார்? என்றிடிலே சேர்த்திடுமே
தன்னிகரில் காரைக் குடி.
சொற்பொருள் விளக்கம் — காரைக்குடி
| சொல் | பொருள் |
|---|---|
| இறை | வரி |
| உறு | நிகழ்வு, நேரும் வறுமை, நேரும் உறுவறுமை |
| (வினைத்தொகை) | நேரும் வறுமை, இதனை உரிச் சொல்லாகக் கொண்டு மிகுந்த எனப் பொருள் காணலாம் |
| ஓர் | ஒரு என்பது எதுகை நோக்கி 'ஓர்' என அமைந்துள்ளது |
| காரைக்குடி | 'இச்சொல்லை, கார்+ஐ+குடி' எனப் பிரித்துக் காண்க. கார் – மழை, ஐ – அழகு, குடி – குடிமக்கள் |
பொருள் விளக்கம் — காரைக்குடி
பூவிதனில்......... குடி: நிலத்தில் குளிர்ந்த நீராய்க் கொட்டுவது எது? மலரின் இதழில் நம் பார்வையை ஈர்ப்பது எது? குற்றமற்ற மன்னணுக்கு வரியைக் கொடுத்து அவன் நிதியைப் பெருக்குவது யார்? இந்த மூன்று வினாக்களுக்கும் 'காரைக்குடி' என்பதில் விடை உள்ளது.
காரைக்குடி, 'கார்+ஐ+குடி' எனப் பிரித்துப் பொருள் காண்க. மழை எனும் பொருள் தருவது கார். முதல் வினாவிற்கு இது விடையாகிறது. அழகு எனும் பொருள் தருவது 'ஐ'. இது இரண்டாவது வினாவுக்கு விடையாகிறது. 'குடி' எனும் சொல் மக்கள் எனும் பொருள் தருவதாகும். மூன்றாவது வினாவிற்கான விடை குடி. எனவே மூன்று வினாவிற்கும் 'காரைக்குடி' விடைகளைக் கொண்டுள்ளது.
தண்புனலாய் கொட்டுவது: தண் – குளிர்ச்சி, நீரின் குளிர்ச்சி, மண்ணுக்கு மட்டுமன்று. 'மன மகிழ்ச்சி', மனம் குளிர்ந்தது எனச் சொல்லப்படும்.
'வான் சிறப்பு' அதிகாரத்தில் திருவள்ளுவர் பத்துக் குறளிலும் மழையின் பெருமையினை எடுத்துரைக்கிறார்.
பூவிதழில்......... எது: 'அழகு' என்பது நிலையில்லாதது. ஒரு நிலையில் அழகாகத் தெரிவது பிறிதொரு நிலையில் அழகாகத் தெரியாது. எனவே 'அழகு' என்பது ஒரு வகை மயக்கமே. காண்பவர் மன இயல்புக்கு ஏற்பத் தெரிவதாகும்.
தாவிலாமன்....... யார்?: மன்னன் குற்றமற்றவனாக இருத்தல் வேண்டும். அப்போது தான் மக்களால் தரப்படும் வரி அவன் நிதிகுவயத்தில் (Treasury) சேரும். எனவே மன்னன் எனமட்டும் குறிக்காமல் 'தாவிலா மன்' எனக் குறிக்கப்பட்டது. 'மன்னிறையை' என்பதை 'நிலைபெறும் இறையை' எனவும் 'நிலையான அரசினை' எனப் பொருள் கொள்ளவும் இடமிருக்கிறது.
பாடல் 2 — பொதிகை: அக்கரச் சுதகம்
குறுமுனி அந்நாள் இருந்த மலையும்
வெறுவினரின் சித்தநாச மாலும் – உறுவறுமை
சோர்ந்தோட நன்றாய் உழைழக்க உதவுவதும்
ஓர்பொதி கைதிகை கை. — பொன் சிவம்
சொற்பொருள் விளக்கம் — பொதிகை
| சொல் | பொருள் |
|---|---|
| குறுமுனி | குறுகிய வடிவமுடைய முனி; இதுதொடர் அகத்தியரைக் குறிக்கிறது |
| சித்தம் | 'மனம்' எனும் பொருள் தரும் பிறமொழிச் சொல் |
| தாவு | குற்றம், தாவு+இலா– தாவில்லாத குற்றமில்லாத இலா – இடைக்குறை |
| பூவி | முதல் செய்யுளின் முதல் சீரிலுள்ள 'பூவி', அளவொத்த எதுகை நோக்கி, 'பூவி' யாக நீட்டல் விகாரம் பெற்றுள்ளது |
| மன் | மன்னன் |
| மால் | மயக்கம், மாலும் – மயங்கச் செய்வது எதிர்கால வினைமுற்று |
பொருள் விளக்கம் — பொதிகை
குறுமுனி............ கை: குறுமுனிவனாகிய அகத்தியர் முற்காலத்தில் இருந்த மலையும், அச்சுவ கொண்டாரின் உள்ளம் மயக்கமடையச் செய்வதும் வறுமை வந்துற்ற போதும் அதனை ஒடச் செய்வதறகு உதவுவதுமானது 'பொதிகை' ஆகும்.
அகத்திய மனிவரைக் குறிக்கும் தொடர் குறுமுனி. இவர் குள்ளமான உருவம் கொண்டவர். குற்றாலம் என்னும் இடத்தினூறை தெய்வம் சிவன். இவருக்குக் குறும்பலா ஈசர் எனவும் பெயருண்டு. அங்குள்ள இலிங்கத்தைக் குறுகச்செய்தவர் அகத்தியர் என அகத்தியரை குறுமுனி எனக் குறிக்கிறது. திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியும் அகத்தியரைக் குறுமுனி எனக் குறிக்கிறது.
உறுவறுமை – மிகுந்த வறுமை. துன்பச் சூழலில் 'மிகுந்த' எனும் பொருளில் பயன்படுத்தப்படும் உரிச்சொல் 'உறு' என்பதாகும். 'உழைப்பின் வழரா உறுதிகள் உளவோ' என்பது பழமொழி. 'வெறுங்கை என்பது மூடதனம் விரல்கள் பத்தும் மூலதனம்' என்பது போல. வறுமை சோர்ந்து ஓடவதற்கு உதவுவது 'கை' எனக் கவிஞர் குறிக்கிறார்.
பாவகை விளக்கம்
| பாவகை | விளக்கம் |
|---|---|
| வினாவுத்தரம் | தொடுக்கப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட வினாக்களுக்குக் கிடைக்கும் விடைகளைத் தொகுப்பதால் புதியதோர் சொல் அல்லது தொடர் அமைவும் படியாகப் பாடப்படும் வெண்பா வினாவுத்தரம் ஆகும் |
| அக்சரச் சுதகம் | ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு, அதன் முதல் எழுத்திலிருந்து ஒவ்வொரு எழுத்தாக நீக்கிக்கு கிடைக்கும் புதிய சொல்களின் பொருள்களை விளங்கும்படியாகச் செய்திகளை அமைத்துப் பாடப்படும் வெண்பா அக்கரச் சுதகம் ஆகும் |
நூலின் சிறப்பியல்புகள்
- கரவந்தபுரத்துக் காரிகை — ஐந்து காண்டங்கள், நாற்பது படலங்கள் கொண்ட நூல்
- முதல் காண்டம் — மகிழ்ச்சிக் காண்டம்; அதில் 'புலவரவை கூடிய படலம்' என்பதில் இப்பாடல்கள்
- இருநூறு பாடல்கள் கொண்ட நூல்; பண்டைய காப்பிய அமைப்பில் உள்ளது
- காரைக்குடி — வினாவுத்தரம் வகை வெண்பா
- பொதிகை — அக்கரச் சுதகம் வகை வெண்பா
இரு பாடல்களிலும் பிரிமொழி நிலை — காரைக்குடி
இச்செய்யுளில் 'காரைக்குடி' என்பது பிரிமொழி நிலையில் மூன்று வினாக்களுக்குரிய மூன்று விடைகளைக் கொண்டுள்ளது. 'கார்' = மழை (முதல் வினா விடை), 'ஐ' = அழகு (இரண்டாம் வினா விடை), 'குடி' = குடிமக்கள் (மூன்றாம் வினா விடை) என மூன்றும் சேர்ந்தே 'காரைக்குடி' என்னும் பெயரை ஆக்குகின்றன.
இரு பாடல்களிலும் பிரிமொழி நிலை — பொதிகை
இச்செய்யுளில் 'பொதிகை' என்னும் சொல்லை 'பொ+தி+கை' என பிரித்து ஒவ்வொரு எழுத்தின் பொருளையும் விளக்கிக் காட்டியுள்ளார் கவிஞர் பொன்சிவம். 'பொ' = நல்லது, 'தி' = திகை (தடை), 'கை' = கை (உழைப்பு) என்னும் விளக்கத்தோடு பாடல் அமைந்துள்ளது.
சுருக்கம்
- கவிஞர் பொன்சிவம் — இயற்பெயர் க. பொன்னுசாமி; 27.2.1938 அன்று திருநெல்வேலி மாவட்டம், வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் பிறந்தவர்.
- 'காரவந்தபுரத்துக் காரிகை' என்னும் நூலில் ஐந்து காண்டங்களும் நாற்பது படலங்களும் இருநூறு பாடல்களும் உள்ளன.
- 'காரைக்குடி' — வினாவுத்தரம் வகை வெண்பா; மூன்று வினாக்களுக்கும் 'காரைக்குடி' சொல்லே விடை தருகிறது.
- 'பொதிகை' — அக்கரச் சுதகம் வகை வெண்பா; 'பொதிகை' சொல்லை எழுத்தெழுத்தாக நீக்கி விளங்கும் பொருள் தருகிறது.
- காரைக்குடி: கார் = மழை, ஐ = அழகு, குடி = குடிமக்கள் என பிரிந்து மூன்று வினாக்களுக்கு விடை தருகிறது.
- குறுமுனி என்பது குள்ள உருவமுடைய அகத்தியரைக் குறிக்கும்; அவர் வாழ்ந்த மலை பொதிகை மலை.