'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற புறநானூற்றுச் செய்யுளில் காணப்பெறுவதை அறிவோம். ஒருலகச் சிந்தனையினைப் பல்வேறு கவிஞர்களின் பாடல்களிலும் காணலாம். 20, 21ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக் கவிஞர்களிடமும் ஒருலகச் சிந்தனை முகிழ்த்துள்ளமைக்குக் கவிஞர் காவிரி நாடனின் 'உலகம் எல்லாம் உன் வீடு' கவிதை சிறந்த சான்றாக விளங்குகிறது.
கவிஞர் காவிரி நாடன் — அறிமுகம்
| விவரம் | தகவல் |
|---|---|
| இயற்பெயர் | மொ. ஆறுமுகம் |
| பிறந்த நாள் | 15.7.1936 |
| பெற்றோர் | திரு பழ. மொட்டையாண்டி, திருமதி வீராயி |
| பிறந்த ஊர் | கரூர் மாவட்டம், கிழக்குத் தவிட்டுப் பாளையம் |
| படைப்புகள் | புதினம், நாடகம், கவிதை ஆகிய வடிவங்களில் நூல்கள் படைத்தவர் |
| பணி ஆரம்பம் | தமிழ்நாடு, கல்லூரிக் கல்வித்துறையில் எழுத்தர்; 1994ல் பணி ஓய்வு |
| விருதுகள் | தமிழக அரசின் பரிசுகள் பெற்றவர் |
படைப்புகள்
- வரலாற்றுப் புதினம் — 'செங்கணி'
- சமூக நாடகம் — 'அக்கினி சாட்சியாக'
- கவிதை நூல் — 'காற்றுக்கு வயதில்லை' (நூலாக 1999ல் வெளியீடு)
- 'ஒன்றே நமது சிந்தனை' — 22.10.91 அன்று சென்னை வானொலியில் ஒலிபரப்பு
- 2005 செப்டம்பரில் 'தந்தை பெரியாரின் இறுதி நாள்களும் இதழ்களும்' நூல் வெளியீடு
- அமெரிக்க நாட்டின் 'Biographical Centre' — 2004ல் சாதனையாளர்களில் ஒருவராய் குறிப்பிட்டது
கவிதை — உலகம் எல்லாம் உன் வீடு
இந்தக் கவிதை இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. இரண்டு கவிதைகளும் ஆசிரிய விருத்த வடிவில் உள்ளன. ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள் உள்ளன.
கவிதை 1 — முதல் வரிகள்
அன்பே பண்பின் தலையூற்று
அறிவே மாந்தர் உயிர்க்காற்று
கன்னலின் மாற்றம் கற்கண்டு
கருத்தைத் தீட்டு உயர்வுண்டு
பொன்னை உருக்க நகையுண்டு
புலம்பலை மாற்று வழியுண்டு
தென்னை உயர நதியுண்டு
தேசம் சிறக்க மதியுண்டு
கவிதை 2 — இறுதி வரிகள்
மரங்கள் நட்டால் நிழலுண்டு
மனத்தை வளர்த்தால் மகிழ்வுண்டு
கரங்கள் உழைப்பால் உரமேற்று
காலம் பணியும் சிரமேற்று
திறமை வெடிக்க நெருப்புண்டு
திசையும் திரும்ப மருந்துண்டு
உறவை விரிவாய்ப் பறக்கவிடு
உலகம் எல்லாம் உன் வீடு
சொற்பொருள் விளக்கம்
| சொல் | பொருள் |
|---|---|
| உரம் | வலிமை |
| கரம் | கை என்னும் பொருள் தரும் பிற மொழிச் சொல் 'உழைப்பு' என்னும் பொருளில் எடுத்தாளப்பட்டுள்ளது |
| கன்னல்–சிரம் | கரும்பு |
| சிரம் | 'தலை' என்னும் பொருள் கொண்ட பிறமொழிச் சொல் |
| தீட்டு | கூர்மைப்படுத்து என்னும் பொருள். இங்கு 'வளப்படுத்து' என்னும் பொருளில் எடுத்தாளப்பட்டுள்ளது |
கவிதை 1 — பொருள் விளக்கம்
அன்பே பண்பின் தலையூற்று
பண்பை உருவாக்குவதற்கு அல்லது பண்பு வளர்வதற்கு முதன்மையாக விளங்குவது 'அன்பு' ஆகும். ஊறிவரும் நீரைக் குறிப்பது ஊற்று. 'தலையூற்று' என்பது முதன்மையான ஊற்று என்னும் பொருள்படும். பண்பு வெளிப்பட்டு வர அன்பு அடிப்படையாக அமைகிறது.
'அன்பு ஈனும் ஆர்வம் உடைமை நண்பென்னும் நாடாச் சிறப்பு' என்னும் திருக்குறட் கருத்தை ஒப்பு நோக்குக.
அறிவே மாந்தர் உயிர்க்காற்று
மாந்தரை உயிரோட்டமுடையவராகக் கருதுவதற்கு உரியதாயிருப்பது அவரிடமுள்ள அறிவு. உயிர் இருந்தால் தான் மாந்தரிடம் இயக்கம் நிகழும். உயிரில்லா உடல் இயங்காது. அறிவில்லாதவர்கள் நடமாடினாலும் அவர்கள் பிணத்திற்கு ஒப்பானவர்களே.
கன்னலின் மாற்றம் கற்கண்டு
ஆலையில் கரும்பு பிழியப்பட்டு பிழியப்பட்டு நசுக்கப்படுகிறது. சாறாகிப் பின் செம்மைப்படுத்தப்படுகிறது. கரும்பு பிழியப்படுகிறது, சுவைமிகுந்த கற்கண்டாய் அது ஆகிறது போலச் செம்மைப்படுத்தப்பட்ட கருத்து, ஒருவரின் உயர்வுக்கு உரியதாகிறது.
பொன்னை உருக்க நகையுண்டு
பொன்னை உருக்கினால்தான் அதனை நகையாய் மாற்ற இயலும். அதைப் போல, மனம் சோரும் நிலையினை மாற்றினால் தான் உயர்வு கிடைக்கும்.
தென்னை உயர நதியுண்டு
நாட்டிலுள்ள தென்னை வளருவதற்கு நீர்வளம் தரும் ஆறுகள் உண்டு. அதைப்போல நாட்டைச் சிறப்படைச் செய்ய மாந்தருக்கு அறிவால் நாடு உயர்வு பெறும்.
கவிதை 2 — பொருள் விளக்கம்
மரங்கள் நட்டால் நிழலுண்டு
மரங்களை நட்டு வளர்த்தால் அவை வளர்ந்த பின் நிழல் தந்து உதவுகிறது. மனத்தை வளர்த்தால் மகிழ்ச்சி தோன்றுகிறது. முதல் கவிதையில் சொல்லப்பட்ட இரு பண்புகள் அன்பு, அறிவு இவையே மனத்தை வளர்ப்பனவாகும்.
திறமை வெடிக்க நெருப்புண்டு
நம் திறமை வெளிப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. திறமை என்பது வெடியாகும். வெடிப்பதற்கு நெருப்புத் தேவை. வெடிப்பதற்கு நெருப்புத் தேவை யாவதுபோல் திறமை வெளிப்படவும் நேர்மையான முயற்சி தேவையாகும்.
உறவை விரிவாய்ப் பறக்கவிடு — உலகம் எல்லாம் உன் வீடு
'உறவு' என்பதை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடக்காமல் இருந்தால் எல்லாரும் நம் உறவினர் என்ற நிலை உருவாகும். அப்போது உலகமே நம்முடைய வீடாகிவிடும். ஒரு குறிப்பிட்ட மக்கள், சமுதாயம், நாடு என்னும் நிலையில் உறவுகளைக் கொள்ளாமல் எல்லாரும் நம் உறவினர் என்னை கொண்டால் உலகம் நம்முடையதாகும்.
கவிதை வடிவம்
| பண்பு | விவரம் |
|---|---|
| வடிவம் | ஆசிரிய விருத்தம் |
| ஒவ்வொரு அடியிலும் சீர்கள் | ஆறு சீர்கள் |
| அடி எண்ணிக்கை (ஒவ்வொரு கவிதையும்) | 8 அடிகள் |
| நான்காவது சீர் | அடி மடக்குச் சீரும் (4-வது சீர்) முதல் சீரும் மோனைத் தொடை பெற்றுள்ளது |
| கவிதை எண்ணிக்கை | இரண்டு கவிதைகள் |
கவிதையின் மையக் கருத்து
- அன்பு — பண்பின் தலையான ஊற்று
- அறிவு — மனிதரின் உயிர்க்காற்று
- உழைப்பு — கரங்களால் உரம் ஏறும்
- உறவு — குறுகிய வட்டத்தில் அல்லாமல் உலகெங்கும் விரிவாக
- உலகம் எல்லாம் உன் வீடு — ஒருலகச் சிந்தனை
சுருக்கம்
- கவிஞர் காவிரி நாடனின் இயற்பெயர் மொ. ஆறுமுகம்; 15.7.1936 அன்று கரூர் மாவட்டத்தில் பிறந்தவர்.
- 'காற்றுக்கு வயதில்லை' என்னும் கவிதை நூலாக 1999ல் வெளிவந்தது.
- 'உலகம் எல்லாம் உன் வீடு' — இரண்டு கவிதைகளை உள்ளடக்கிய தலைப்பில் இங்குத் தரப்படுகின்றன.
- கவிதை வடிவம்: ஆசிரிய விருத்தம்; ஒவ்வொரு அடியும் ஆறு சீர்களைக் கொண்டது.
- அன்பு, அறிவு, உழைப்பு, உறவு — இவற்றை விரிவாக வைத்து உலகம் முழுவதும் நம் வீடு என்னும் ஒருலகச் சிந்தனையை கவிஞர் வலியுறுத்துகிறார்.
- அமெரிக்க நாட்டின் 'Biographical Centre' 2004ல் காவிரி நாடனை சாதனையாளர்களில் ஒருவராக குறிப்பிட்டுள்ளது.