இலக்கணம் – பொது (General Grammar)
திணை (Thinai)
தமிழ் இலக்கணத்தில் திணை என்பது உயிரினங்களை இரண்டு வகையாக பிரிக்கும் முறையாகும்.
- உயர்திணை – மனிதர்கள் (அறிவுடைய உயிரினங்கள்)
- அஃறிணை – மனிதர்கள் அல்லாத உயிரினங்களும் பொருட்களும் (அறிவற்றவை)
பால் (Paal – Gender/Number)
பால் என்பது திணையின் உட்பிரிவாகும். மொத்தம் ஐந்து பால்கள் – இதை ஐம்பால் என்கிறோம்.
| திணை | பால் | எண்ணிக்கை |
|---|---|---|
| உயர்திணை | ஆண்பால், பெண்பால், பலர்பால் | 3 |
| அஃறிணை | ஒன்றன்பால், பலவின்பால் | 2 |
| மொத்தம் (ஐம்பால்) | 5 | |
எடுத்துக்காட்டுகள்
- ஆண்பால்: வீரன், அண்ணன், மருதன்
- பெண்பால்: மகள், அரசி, தலைவி
- பலர்பால்: மாணவர்கள், அரசர்கள்
- ஒன்றன்பால்: யாதன, புறா, மலை
- பலவின்பால்: பசுக்கள், மலைகள்
மூவிடம் (Three Persons)
தமிழ் இலக்கணத்தில் மூன்று இடங்கள் உள்ளன:
- தன்மை – முதல் நபர் (நான், நாம்) – First Person
- முன்னிலை – இரண்டாம் நபர் (நீ, நீங்கள்) – Second Person
- படர்க்கை – மூன்றாம் நபர் (அவன், அவள், அது) – Third Person