நூலகம்
· ஒரு மனிதன் ஆண்டுக்கு 2000 பக்கங்களாவது படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது.
· கிரீஸ் நகர அரசுகளே முதன் முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன.
· இந்தியாவில் உள்ள நூலகங்களில் கல்கத்தா தேசிய நூலகம் முதன்மையானது.
· புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிப்பகம், நூல்நிலையம், பண்டாரம் என நூலகம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
· ஆங்கிலத்தில் ”லைப்ரரி ” என்னும் சொல் நூலகத்தை குறிக்கின்றது.
· இலத்தின் மொழியில் ”லிப்ரா ” என்னும் சொல்லிற்குப் புத்தகம் என்பது பெயர்.
· இந்தியாவிலேயே முதன் முறையாகத் தமிழக அரசுத் தான் 1948ஆம் ஆண்டு சென்னை பொது நூலகச் சட்டத்தை இயற்றியது.
· தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ”புத்தகப்பூங்கொத்து ” என்னும் வகுப்பறை நூலகத் திட்ட்டத்தை தொடங்கியுள்ளது.
· இந்திய நூலகத் தந்தை - சீர்காழி சீ.இரா.அரங்கநாதன்.