நிற்க நேரமில்லை
இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் – வழி என்னென்ன வாகுமோ ஓரிரவில் சென்றிளைப் பாறுக முற்றிடத்தே – தம்பி தேன்வந்து பாயும் உன் நெஞ்சிடத்தே! சாதனைப் பூக்களை ஏந்துமுன்னே – இங்கு நல்லசெடி இளைப் பாறிடுமோ? வேதனை யாவும் மறந்ததுபார் – செடி வெற்றி கொண்டேந்திய பூவினிலே - சாலை இளந்திரையன் |
சொற்பொருள்:
· செத்தை – குப்பைகூளம்
· இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல்
ஆசிரியர் குறிப்பு:
· சாலை. இளந்திரையனின் பெற்றோர் இராமையா, அன்னலட்சுமி.
· இவர் திருநெல்வேலி மாவட்டம் சாலைநயினார் பள்ளிவாசல் என்னும் இடத்தில பிறந்தார்.
· தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவாரக இருந்தார்.
· உலகத்தமிழ் ஆராய்சிக் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமாக இருந்தவர்.
· 1991இல் ”பாவேந்தர் விருதினை ” பெற்றவர்.
· காலம் - 06.09.1930 – 04.10.1998.
நூல் குறிப்பு:
· இப்பாடல் ”பூத்தது மானுடம் ” என்னும் கவிதைத் தொகுப்பில் இல்லது.
மேலும் இவர் புரட்சி முழக்கம், உரை வீச்சு போன்ற நூல்களை படைத்துள்ளார்