அயோத்திதாசப் பண்டிதர்
தோற்றம்:
· சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள, மக்கிமா நகரில், 1845ஆம் ஆண்டு மே திங்கள் இருபதாம் நாள் பிறந்தார்.
· இவரின் தந்தையார் பெயர் கந்தசாமி.
· இவரின் இயற்பெயர் - காத்தவராயன்.
சிறப்பு:
· இவர் தென்னிந்திய சீர்திருத்தத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
குருவை போற்றிய குருமணி:
· இவர் அயோத்திதாசர் என்பவரிடம் கல்வி கற்றார்.
· இவர் சித்த மருத்துவமும் பயின்றார்.
· தம் ஆசிரியர் பெயரையே தம் பெயராக ஆக்கிக்கொண்டார்.
· அவரின் ஆசிரியர் எழுதிய கவிதையை, தாம் பிற்காலத்தில் தொடங்கிய ”ஒரு பைசாத் தமிழன் ” எனும் இதழில் வெளியிட்டார்.
திருமணம்:
· இவர் நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தொடர் இனப்பிரிவில் கலப்புத்திருமணம் செய்துக்கொண்டு பத்து ஆண்டுகள் இரங்கூன் சென்று வாழ்ந்தார்.
புத்த நெறி:
· இவர் புத்த நெறியால் கவரப்பட்டார்.
· புத்த மதக் கருத்துக்களை எல்லோருக்கும் எடுத்துரைத்தார்.
· தமக்குப் பிறந்த மகன்களுக்குப் பட்டாபிராமன், மாதவராம், சானகிராமன், இராசாராம் என்று பெயர் சூட்டினார்.
· தம் மகள்களுக்கு அம்பிகதேவி, மாயாதேவி என்று பெயரிட்டார்.
சமூகப் பணி:
· இவர் மருத்துவர் என்றும் பண்டிதர் என்றும் அழைக்கப்பெற்றவர்.
· எவரையும் சாதி பெயரை சொல்லி அழைப்பது தவறு என்றார்.
· தாழ்த்தப்பட்டவர்களுக்குத் கல்வி வசதி, கல்வி உதவித்தொகை, கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுவேலை போன்றவற்றை போராடி பெற்று தந்தார்.
· தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சென்னையில் ஐந்து இடங்களில் ”ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் ” தொடங்கினார்.
இதழ்ப்பணி:
· அன்றைய காலணா விலையில் ”ஒரு பைசாத் தமிழன் ” என்ற இதழை வெளியிட்டார்.
· அது 19.06.1907 முதல் சென்னை இராயப்பேட்டையில் இருந்து புதன் தோறும் நான்கு பக்கங்களுடன் வெளிவந்தது.
புதிய தீபாவளி:
· எள்ளு செடியின் விதையில் இருந்து நெய் கண்டுபிடித்த திருநாளே தீபாவளி என்று புதிய விளக்கம் தந்தார்.
· அதற்கு ஆதாரமாக ஜப்பான் நாட்டில் இன்றும் நுகர்பொருள் கண்டுபிடிப்புத் திருநாளாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்றார்.
இயற்றிய நூல்கள்:
· “புத்தரது ஆதிவேதம் ”(28 காதைகள், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழி துணையுடன் எழுதினார்).
· இந்திரதேசத்து சரித்திரம.
பிறப்பணி:
· தமிழில் எழுத்து சீர்திருத்தம் செய்தார்.
· திருவாசகத்திற்கு உரை எழுதியுள்ளார்.
மறைவு:
· “நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றே. அதாவது, உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் ” என்றார்.
· 1914ஆம் ஆண்டு மேமாதம் ஐந்தாம் நாள் மறைந்தார்.