திருவருட் பிரகாச வள்ளலார்
மறுமலர்சிக் காலம்:
· பத்தொன்பதாம் நூற்றாண்டை தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்பர்.
· அக்காலத்தே புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பை பெற்றவர் வள்ளலார்.
வருவிக்க உற்றவர்:
· கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூரில் 05.10.1823இல் இராமையா, சின்னம்மை இனையார்க்கு ஐந்தாவது மகவாக இராமலிங்கர் பிறந்தார்.
· ஆலய அந்தணர் இவர் குழந்தையாக இருந்த பொழுது, இவரை ”இறையருள் பெற்ற திருக்குழந்தை ” என்று பாராட்டினார்.
· “அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்து ” என இறைவன் தம்மை வருவிக்க உற்றதாகக் கூறுவார்.
· இவர் சபாபதி என்பவரிடம் கல்வி கற்றார்.
· ஒன்பது வயதிலேயே பாடல் புனையும் திறன் பெற்றிருந்தார்.
உத்தம மனிதர்:
· திகம்பர சாமியார், இவரை ”ஓர் உத்தம மனிதர் ” என்றார்.
ஒருமையுணர்வு:
· சென்னையில் உள்ள கந்தக்கோட்டத்து இறைவனை இராமலிங்கர் வணங்கி பாடிய பாடல்களின் தொகுப்பே ”தெய்வமணிமாலை ”.
|
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் |
· இராமலிங்கர், ”வடிவுடை மாணிக்கமாலை ” என்னும் நூலையும், திருவெற்றியூர் சிவபெருமான் மீது ”எழுந்தரியும் பெருமான் மாலை ” என்னும் நூலையும் பாடினார்.
புரட்சித் துறவி:
· ஒருமைவாழ்வு, ஒருமையரசு, ஒருமையுலகம் காண விரும்பினார்.
· ஆணும் பெண்ணும் சமம் என்றார்.
|
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர் ஆகிஉலா கியல்நடத்தல் வேண்டும்
சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன் |
பசிப்பிணி மருத்துவர்:
· “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் ” என்று பயிர்வாடத் தாம் வாடினார்.
· வடலூரில் ”சத்திய தருமச்சாலை ” நிறுவி அனைவர்க்கும் உணவளித்தார்.
பேரின்ப வீட்டின் திறவுகோல்;
· “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் ” என்றார் வள்ளலார்.
· கடவுளின் பெயரால் உயிர் கொலை செய்வதனை அறவே வெறுத்தார்.
· போரில்லா உலகை படைக்க விழைந்தார்.
புதுநெறி கண்ட புலவர்:
· ஆறு தொகுதிகள் கொண்ட இவரது பாடல்களைத் ”திருவருட்பா ” என மக்கள் போற்றுகின்றனர்.
· இவர் உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்றச் செய்தார்.
· பாரதியார் இவரை ”புதுநெறி கண்ட புலவர் ” எனப் போற்றினார்.
தமிழ்ப்பற்று:
· தமிழ் மொழியே இறவாத நிலை தரும் என்றார்.
· பயில்வதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுவதற்கும் இனிமை உடைய மொழி என்றார்.
இறைநிலை அடைதல்:
· 1874ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாள் அன்று இறவாநிலை எய்தினார்.