நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
|
மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன் தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே - குலசேகர ஆழ்வார் |
சொற்பொருள்:
· மீன்நோக்கும் – மீன்கள் வாழும்
· என்பால் – என்னிடம்
· தார்வேந்தன் – மாலையணிந்த அரசன்
· கோல்நோக்கி – செங்கோல் செய்யும் அரசனை நோக்கி
இலக்கணக்குறிப்பு:
· நோக்காய் – முன்னிலை ஒருமை வினைமுற்று
· கோல்நோக்கி – இரண்டாம் வேற்றுமைத்தொகை
· தார்வேந்தன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
· வாழும்குடி – பெயரெச்சம்
பிரித்தறிதல்:
· பற்றில்லேன் - பற்று + இல்லேன்
· போன்றிருந்தேன் - போன்று + இருந்தேன்
ஆசிரியர் குறிப்பு:
· கேரள மாநிலத்தில் உள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்தவர் குலசேகர ஆழ்வார்.
· இராமபிரானிடம் பக்தி மிகுதியாக கொண்டதால், இவர் ”குலசேகரப் பெருமாள் ” எனவும் அழைக்கப்பட்டார்.
· இவர் 12 ஆழ்வார்களுள் ஒருவர்.
· இவர் இயற்றிய பெருமாள் திருமொழியில் 105 பாசுரங்கள் உள்ளன.
· இவர் தமிழில் பெருமாள் திருமொழியும், வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
· குலசேகரர், திருவரங்கத்தின் மூன்றாவது மதிலைக் கட்டியதால், அதற்குக் குலசேகரன் வீதி என்னும் பெயர் இன்றும் வழங்கி வருகிறது.
· இவரின் காலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு.