கலித்தொகை
சொற்பொருள்:
· கிளை – சுற்றம்
· நோன்றல் – பொறுத்தல்
இலக்கணக்குறிப்பு:
· ஒழுகுதல் – தொழிற்பெயர்
· பொறுத்தல் – தொழிற்பெயர்
பிரித்தறிதல்:
· அன்பெனப்படுவது - அன்பு + எனப்படுவது
· பண்பெனப்படுவது - பண்பு + எனப்படுவது
ஆசிரியர் குறிப்பு:
· நல்லந்துவனார் சங்க காலத்தவர்.
· இவரை பற்றிய குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை.
· இவர் நெய்தல் கலியில் 33 பாடல்கள் பாடியுள்ளார்.
· கலித்தொகையை தொகுத்தவர் இவரே.
நூல் குறிப்பு:
· இந்நூல் கலிப்பாவால் ஆனது.
· இது நாடகப் பாங்கில் அமைந்துள்ளது.
· இசையோடு பாடுவதற்கு ஏற்றது.
· இந்நூலில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து 150 பாடல்கள் உள்ளன.
· கலிப்பா துள்ளல் ஓசை உடையது.
இந்நூலை ”கற்றறிந்தோர் ஏத்தும் கலி ” எனச் சிறப்பிப்பர்