சீறாப்புராணம்
சொற்பொருள்:
· தெண்டிரை – தெளிந்த அலைகள்
· கான் – காடு
· தடக்கரி – பெரிய யானை
· திரள் – கூட்டம்
· தாரை – வழி
· அடவி – காடு
· உழுவை – புலி
· கனல் – நெருப்பு
· வெள்ளெயிறு – வெண்ணிறப் பற்கள்
· வனம் – காடு
· வள்ளுகிர் – கூர்மையான நகம்
· மடங்கள் – சிங்கம்
· நிணம் – கொழுப்பு
· கோடு – தந்தம்
· கிரி – மலை
· உரும் – இடி
· தொனி – ஓசை
· மேதி – எருமை
· கவை – பிளந்த
· கேழல் – பன்றி
· எண்கு – கரடி
· மரை – மான்
· எழில் – அழகு
· புயம் – தோள்
· இடர் – துன்பம்
· வேங்கை – புலி
· மாத்திரம் – மலை
· கேசரி – சிங்கம்
· புளகிதம் – மகிழ்ச்சி
· கவின் – அழகு
· பூதரம் – மலை
· தெரிசனம் – காட்சி
· திறல் – வலிமை
· புந்தி – அறிவு
· மந்தராசலம் – மந்தரமலை
· சந்தம் – அழகு
· சிரம் – தலை
· செகுதிடுவது – உயிர்வதை செய்வது
· உன்னி – நினைத்து
· தெளிந்தார் – தெளிவு பெற்றார்
இலக்கணக்குறிப்பு:
· படர்ந்த தெண்டிரை – பெயரெச்சம்
· நதிப்பரப்பு – ஆறாம் வேற்றுமைத்தொகை
· தொழுது அறைகுவன் – வினையெச்சம்
· தடக்கரி – உரிச்சொற்றொடர்
· நெடுநீர் – பண்புத்தொகை
· பொருந்தி – வினையெச்சம்
· புடைத்து, நிமிர்ந்து – வினையெச்சம்
· கால் மடித்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
· வெள்ளெயிறு – பண்புத்தொகை
· பெருங்கரி – பண்புத்தொகை
· முதிர்ந்தமேதி – பெயரெச்சம்
· பொதிந்தமெய் – பெயரெச்சம்
· செவிபுக – ஏழாம் வேற்றுமைத்தொகை
· நின்ற வேங்கை – பெயரெச்சம்
· செங்கதிர், பெருவரி – பண்புத்தொகை
· பூதரப்புயம் – உவமைத்தொகை
· வால்குழைத்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
· பெருஞ்சிரம், தண்டளி – பண்புத்தொகை
· எழுந்து, புதைத்து, வணங்கி – வினையெச்சம்
· நனிமனம் – உரிச்சொற்றொடர்
· சிரமுகம் – உம்மைத்தொகை
· உயிர்செகுத்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
· புகுக – வியங்கோள் வினைமுற்று
· மலரடி – உவமைத்தொகை
· நன்று நன்று – அடுக்குத்தொடர்
· கொலைப்புலி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
பிரித்தறிதல்:
· பணிந்திவர் - பணிந்து + இவர்
· சிரமுகம் - சிரம் + முகம்
· பெருஞ்சிரம் - பெருமை + சிரம்
· தண்டளிர்ப்பதம் - தண்மை + தளிர் + பதம்
· திண்டிறல் - திண்மை + திறல்
· எண்கினங்கள் - எண்கு + இனங்கள்
· வீழ்ந்துடல் - வீழ்ந்து + உடல்
· கரிக்கோடு - கரி + கோடு
· பெருங்கிரி - பெருமை + கிரி
· இருவிழி - இரண்டு + விழி
· வெள்ளெயிறு - வெண்மை + எயிரு
· உள்ளுறை - உள் + உறை
· நெடுநீர் - நெடுமை + நீர்
· அவ்வழி - அ + வழி
· தெண்டிரை - தெண்மை + திரை
ஆசிரியர் குறிப்பு:
· சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்.
· இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
· அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க சீறாப்புராணம் இயற்றினார்.
· நூல் முற்றும் முன்னரே சீதக்காதி மறைந்தார்.
· அபுல்காசிம் என்ற வள்ளல் உதவியால் இந்நூல் நிறைவு பெற்றது.
· இவர் எண்பது பாக்களால் ஆன முதுமொழிமாலை என்னும் நூலையும் படைத்துள்ளார்.
· இவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
· சீறா - வாழ்க்கை, புராணம் - வரலாறு.
· இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜிரத்துக் காண்டம் என்னும் முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
· 5027 விருதப்பாக்களால் ஆனது.