தேவாரம்
சொற்பொருள்:
· இடர் – துன்பம்
· ஏமாப்பு – பாதுகாப்பு
· பிணி – நோய்
· நடலை – துன்பம்
· சேவடி – இறைவனின் செம்மையான திருவடிகள்
· நமன் – எமன்
இலக்கணக்குறிப்பு:
· நற்சங்கு – பண்புத்தொகை
· வெண்குழை – பண்புத்தொகை
· மலர்ச்சேவடி – உவமைத்தொகை
· மீளா ஆள் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பிரித்தறிதல்:
· பிநியறியோம் - பிணி + அறியோம்
· எந்நாளும் - எ + நாளும்
· நாமென்றும் - நாம் + என்றும்
ஆசிரியர் குறிப்பு:
· திருநாவுக்கரசர் திருவாமூரில் பிறந்தவர்.
· பெற்றோர் - புகழனார், மாதினியார்.
· இவரது தமக்கையார் திலகவதியார்.
· இயற் பெயர் - மருணீக்கியார்
· சிறப்பு பெயர்கள் - தருமசேனர், அப்பர், வாகீசர்.
· இவரின் நெறி - தொண்டு நெறி
· இவர் தாண்டகம் பாடுவதில் வல்லவர். அதனால் இவரை ”தாண்டக வேந்தர் ” எனப்படுவார்.
· இவரது காலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டு.
· திருவாமூர், கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியை அடுத்து உள்ளது.
நூல் குறிப்பு:
· தேவாரம் என்னும் சொல்லைத் தே+வாரம் எனப் பிரித்துத் தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்கள் என்று கூறுவர்.
· தே+ஆரம் எனப் பிரித்து தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற பாமாலை என்றும் கூறுவர்.
· அப்பர் அருளிய பாடல்கள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள்.