திருக்குறள்
சொற்பொருள்:
· மூத்த – முதிர்ந்த
· கேண்மை – நட்பு
· தேர்ந்து – ஆராய்ந்து
· நோய் – துன்பம்
· உறாஅமை – துன்பம் வராமல்
· பேணி – போற்றி
· தமர் – உறவினர்
· வன்மை – வலிமை
· தலை – சிறப்பு
· சூழ்வார் – அறிவுடையார்
· செற்றார் – பகைவர்
· இல் – இல்லை
· தகைமை – தன்மை
· ஏமரா – பாதுகாவல் இல்லாத
· மதலை – துணை
· எள்ளுவர் – இகழ்வர்
· பொய்யா விளக்கம் – அணையா விளக்கு
· இருள் – பகை
· ஈனும் – தரும்
· தீதின்றி – தீங்கின்றி
· புல்லார் – பற்றார்
· உறுபொருள் – அரசு உரிமையால் வரும்பொருள்
· உல்குபொருள் – வரியாக வரும்பொருள்
· தெரு – பகை
· குழவி – குழந்தை
· செவிலி – வளர்ப்புத்தாய்
· குன்று – மலை
· செருக்கு – இறுமாப்பு
இலக்கணக்குறிப்பு:
· அறனறிந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
· திறனறிந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
· தேர்ந்து கொளல் – வினையெச்சம்
· கொளல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
· உற்றநோய் – பெயரெச்சம்
· உறாஅமை – செய்யுளிசை அளபெடை
· பெற்றியார் – வினையாலணையும் பெயர்
· கொளல் – தொழிற்பெயர்
· வன்மை – பண்புப்பெயர்
· ஒழுகுதல் – தொழிற்பெயர்
· சூழ்வார் – வினையாலணையும் பெயர்
· தக்கார் – வினையாலணையும் பெயர்
· துணையார் – வினையாலணையும் பெயர்
· இல்லை – குறிப்பு வினைமுற்று
· பகைகொளல் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
· பொய்யா விளக்கம் – ஈறுகெட எதிர்மறைப் பெயரெச்சம்
· அறனீனும் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
· வந்த பொருள் – பெயரெச்சம்
· திறன் – கடைப்போலி
· வாராப் பொருளாக்கம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
· தன்ஒன்னார் – ஆறாம் வேற்றுமைத்தொகை
· வேந்தன் பொருள் – ஆறாம் வேற்றுமைத்தொகை
· ஈன்குழவி – வினைத்தொகை
· செல்வச்செவிலி – உருவகம்
· குன்றேறி – ஏழாம் வேற்றுமைத்தொகை
· செய்க – வியங்கோள் வினைமுற்று
· செறுநர் செருக்கு – ஆறாம் வேற்றுமைத்தொகை
· ஒண்பொருள் – பண்புத்தொகை