தொன்மைத் தமிழகம்
மனித நாகரிகத் தொட்டில்:
· முதல் மாந்தன் தோன்றிய இலெமூரியாவை, ”மனித நாகரிகத் தொட்டில் ” என்பர்.
சிலாபதிகாரப் பாடல்:
· தமிழகம் இன்றுபோல் இல்லாமல், குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது.
· இச்செய்தியைப் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் தெளிவாக உணர்த்தும்.
|
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள |
பாவேந்தர்:
· புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். தமிழின் பழமை சிறப்பினைப் பெருமிதம் பொங்கி கூறுவது
|
திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் |
வாணிகம்:
· தமிழர்கள் அறத்தின் வழியே வாணிகம் செய்தார்கள்.
· உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருள் ஈட்டினர்.
கடல் வாணிகம்:
· கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில்தோகையும்,சந்தனமும் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்தனர்.
· கி.மு.பத்தாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில்தோகையும், வாசனைப் பொருள்களும் அனுப்பப்பட்டன.
· தமிழர்கள் சாவகநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
தனிநாயகம் அடிகளாரின் கூற்று:
· தமிழ்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இர்ருந்து வருகிறது. இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வேறெங்குமில்லை என்றார் தனிநாயகம் அடிகளார்.
மொழித் தொன்மை:
· “தமிழ்கெழு கூடல் ” என புறநானூறு கூறுகிறது.
· “தமில்வேலி ” எனப் பரிபாடல் கூறுகிறது.
· “கூடலில் ஆய்ந்த ஒன்தீந் தமிழின் ” என் மணிவாசகம் கூறுகிறது.
ஏற்றுமதியும் இறக்குமதியும்:
· தமிழர்களின் ஏற்றுமதி இறக்குமதி பற்றி குறிப்பிடும் நூல்கள், பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும்.
· காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் பொருள்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததனைப் பட்டினப்பாலை அடிகள் கூறுகிறது.
|
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் .......... மயங்கிய நனந்தலை மறுகு. |
இசைக்கலை:
· பண்டையக்காலத் தமிழர்களின் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.
· “நரம்பின் மறை ” என்று தொல்காப்பியம் கூறுகிறது.
· ஒப்பாரி என்பது, இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று இறந்தவரைப் பற்றிப் பாடுவது.
· இன்றைய கருநாடக இசைக்குத் தாய் நம் தமிழிசையே.
· “பண்ணொடு தமிழொப்பாய் ” என தேவாரம் கூறுகிறது.
· குழலினிது யாழினிது என்று இசைபோளியும் கருவிகளை வள்ளுவம் குறிக்கின்றது.
உழவுத் தொழில்:
· “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் ” என்கிறது திருக்குறள்.
· “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ” எகிறது புறநானூறு.
· உழவுக்கு சிறப்பு பெற்ற நிலம் மருதநிலம்.
பழந்தமிழர் வாழ்வு:
· அறத்தின் அடிப்படையில் தொடங்கியது தமிழர் வாழ்வு.
· “களிறு எரிந்து பெயர்தல் காளைக்குக் கடனே ” என்னும் புறப்பாடல், வீரத்தினை முதல் கடமையாக்கின்றது.
· ஒக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர், பெண்களின் வீரத்தினை பாடியுள்ளார்.