தமிழ்விடு தூது
சொற்பொருள்:
· அரியாசனம் – சிங்காதனம்
· பா ஒரு நான்கு – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
· வரம்பு – வரப்பு
· ஏர் – அழகு
· நார்கரணம் – மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
· நெறிநாலு – வைதருப்பம்(ஆசுகவி),கௌடம்(மதுரகவி),பாஞ்சாலம்(சித்திரகவி),மாகதம்(வித்தாரகவி)
· நாற்பொருள் – அறம், பொருள், இன்பம், வீடு
· சீத்தையர் – கீழானவர், போலிப்புலவர்
· நாளிகேரம் – தென்னை
இலக்கணக்குறிப்பு:
· செவியறுத்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
பிரித்தறிதல்:
· நாற்கரணம் - நான்கு + கரணம்
· காரணத்தேர் - கரணத்து + ஏர்
· நாற்பொருள் - நான்கு + பொருள்
· இளங்கனி - இளமை + கனி
· விண்ணப்பமுண்டு - விண்ணப்பம் + உண்டு
நூற்குறிப்பு:
· தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
· கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ அஃறினைப்பொருளையோ தூது அனுபுவதாகப் பாடுவது தூது இலக்கியம்.
· இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.