பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்
· இலங்கையில் உள்ள கண்டியில் 1917ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 17ஆம் நாள் பிறந்தார்.
· பெற்றோர் - கோபாலமேனன், சத்தியபாமா.
· வறுமையின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் நகருக்கு குடிபெயர்ந்தனர்.
· அங்கு ஆணையடிப் பள்ளியில் படித்தார். வருமையின் காரணமாக படிப்பை தொடரமுடியவில்லை.
· நாடகங்களில் நடித்து, திரைப்படத்துறையில் ஈடுபட்டுச் சிறுசிறு பாத்திரங்களில் நடித்துக் கதாநாயகனாக உயர்ந்தார்.
· அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல் இவரை மிகவும் கவர்ந்தது.
· நடிப்பையும், அரசியலையும் தம் இரு கண்களாக கருதினார்.
· மக்கள் அவரை, ”புரட்சி நடிகர் ” என்றும், ”மக்கள் திலகம் ” என்றும் போற்றினர்.
· அறிஞர் அண்ணாவின் நெஞ்சம் கவர்ந்தவராக எம்.ஜி.ஆர். விளங்கியதனால், அவரை அறிஞர் அண்ணா, ”இதயக்கனி ” என்று போற்றினார்.
· இவர் 1963ஆம் ஆண்டு, சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.
· 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
· 1972ஆம் ஆண்டில், தாமிருந்த இயக்கத்தில் இருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கினார்.
· அவர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்று முதல்வராகப் பதவி ஏற்றார்.
· 11 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்.
· சென்னை பல்கலைக்கழகம் அவரது பணிகளைப் பாராட்டி, டாக்டர் பட்டம் வழங்கியது.
· இந்திய அரசு, சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் வழங்கியது.
· மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு வழங்கும் திட்டம் ஆக மாற்றினார்.
· 24.12.1987 ஆன்று இயற்கை எய்தினார்.
· 1988ஆம் ஆண்டு இந்திய அரசு அவரின் மறைவுக்குப் பின் பாரதரத்னா விருது(இந்திய மாமணி) வழங்கியது.