பெரியபுராணம்
சொற்பொருள்:
· மிசை – மேல்
· திருநீற்றுக்காப்பு – திருநீறு
· நேர்ந்தார் – இசைந்தார்
· பொற்குருத்து – இளமையான வாழைக்குருத்து
· ஒல்லை – விரைவு
· மல்லல் – வளமான
· ஆம் – அழகிய
· வால் – கூரிய
· அரா – பாம்பு
· அல்லல் – துன்பம்
· அங்கை – உள்ளங்கை
· உதிரம் – குருதி
· மேனி – உடல்
· மறைநூல் – நான்மறை
· சேய் – குழந்தை
· பூதி – திருநீறு
· மெய் – உண்மை
· பணிவிடம் – பாம்பின் நஞ்சு
· சவம் – பிணம்
இலக்கணக்குறிப்பு:
· காய்ந்தார் – நீக்கினார்
· மனை – வீடு
· ஆ – பசு
· மேதி – எருமை
· நிறைகோல் – துலாக்கோல்(தராசு)
· தடம் – தடாகம்
· மந்தமாருதசீதம் – குளிர்ந்த காற்றுடன் கூடிய நீர்
· சந்தம் – அழகு
· ஈறு – எல்லை
· கல்மிதப்பு – கல்லாகிய தெப்பம்
· புவனம் – உலகம்
· சூலை – கொடிய வயிற்றுநோய்
· தெருளும் – தெளிவில்லாத
· கரம் – கை
· கமலம் – தாமரை
· செலவொழியா வலி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
· வழிக்கரை – ஆறாம் வேற்றுமைத்தொகை
· உறுவேனில் – உரிச்சொற்றொடர்
· நீர்த்தடம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
· பந்தர் – கடைப்போலி
· அணைந்த வாகீசர் – பெயரெச்சம்
· பொங்குகடல் – வினைத்தொகை
· பெருமையறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை
· அறிந்து, அடைந்து – வினையெச்சம்
· கரகமலம் – உருவகம்
· பொழிந்திழிய – வினையெச்சம்
· தேசம் – இடவாகு பெயர்
· வந்தவர் – வினையாலணையும் பெயர்
· நற்கரிகள், இன்னமுதம் – பண்புத்தொகை
· தாய்தந்தை – உம்மைத்தொகை
· மல்லலம் குருத்து – உரிச்சொற்றொடர்
· தீண்டிற்று – ஒன்றன்பால் வினைமுற்று
· துளங்குதல் – தொழிற்பெயர்
· பூதி சாத்த – இரண்டாம் வேற்றுமைத்தொகை
· அங்கணர் – அன்மொழித்தொகை
· நோக்கி – வினையெச்சம்
· எழுந்து, சென்று – வினையெச்சம்
· பணிவிடம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
· கேளா – செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம்
பிரித்தறிதல்:
· செலவொழியா - செலவு + ஒழியா
· வழிக்கரை - வழி + கரை
· வந்தணைந்த - வந்து + அணைந்த
· எம்மருங்கும் - எ + மருங்கும்
· எங்குரைவீர் - எங்கு + உறைவீர்
· கண்ணருவி - கண் + அருவி
· உடம்பெல்லாம் - உடம்பு + எல்லாம்
· திருவமுது - திரு + அமுது
· மனந்தழைப்ப - மனம் + தழைப்ப
· நற்கரிகள் - நன்மை + கறிகள்
· இன்னமுது - இனிமை + அமுது
· வாளரா - வாள் + அரா
· அங்கை - அம் + கை
· நான்மறை - நான்கு + மறை
· பாவிசை - பா + இசை
ஆசிரியர் குறிப்பு:
· பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார்.
· இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர்.
· இவரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்.
· இவர் அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர்.
· இவர் உத்தமசோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்.
· இவரைத் தெய்வச் சேக்கிழார் என்றும் தொண்டர்சீர் பரவுவார் என்றும் போற்றுவர்.
· இவரின் காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
· தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவர்.
· அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் ”பெரியபுராணம் ” என்னும் பெயர் பெற்றது.
· இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் ”திருத்தொண்டர் புராணம் ” என்பதாகும்.
· தில்லை நடராசப்பெருமான், ”உலகெலாம் ” என்று அடியெடுத்த்துக் கொடுக்கப் பாடப்பெற்றதெனவும் கூறுவர்.
· மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், ”பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ ” எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்கிறார்.
· உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான், ”பெரியபுராணம் ” என்பார் திரு.வி.க.