புறநானூறு
சொற்பொருள்:
· துகிர் – பவளம்
· மன்னிய – நிலைபெற்ற
· செய – தொலைவு
· தொடை – மாலை
· கலம் – அணி
இலக்கணக்குறிப்பு:
· பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் – எண்ணும்மை
· மாமாலை – உரிச்சொற்றொடர்
· அருவிலை, நன்கலம் – பண்புத்தொகை
பிரித்தறிதல்:
· அருவிலை - அருமை + விலை
· நன்கலம் - நன்மை + கலம்
ஆசிரியர் குறிப்பு:
· இப்பாடலாசிரியர் கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்.
· கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொது, பிசிராந்தையாரின் வருகைக்காகக் காத்திருந்தான்.
· அப்போது அவருடன் இருந்தவர் கண்ணகனார்.
· அவன் உயிர் துறந்தபொழுது மிகவும் வருந்தினார் கண்ணகனார்.
நூல் குறிப்பு:
· எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
· இது புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது.