நற்றிணை
சொற்பொருள்:
· அரி – நெற்கதிர்
· சேறு – வயல்
· யாணர் – புதுவருவாய்
· வட்டி – பனையோலைப் பெட்டி
· நெடிய மொழிதல் – அரசரிடம் சிறப்புப் பெறுதல்.
இலக்கணக்குறிப்பு:
· சென்ற வட்டி – பெயரெச்சம்
· செய்வினை – வினைத்தொகை
· புன்கண், மென்கண் – பண்புத்தொகை
· ஊர – விளித்தொடர்
பிரித்தறிதல்:
· அங்கண் - அம் + கண்
· பற்பல - பல + பல
· புன்கண் - புன்மை + கண்
· மென்கண் - மேன்மை + கண்
ஆசிரியர் குறிப்பு:
· மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.
· இவர், ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.
இவர் பாடியனவாக் நற்றிணையில் நான்கு பாடலும் குறுந்தொகையில் ஒன்றாக ஐந்து பாடல் உள்ளன
நூல் குறிப்பு:
· பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கநூல்கள்.
· “நல் ” என்னும் அடைமொழியை கொண்டு போற்றப்படுவது நற்றிணை.
· இதில் ஐந்து தினைகளுக்குமான பாடல்கள் உள்ளன.
· இதிலுள்ள பாடல்கள், ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரெல்லையும் கொண்டவை.
· இப்பாடல்களைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
· தொகுப்பித்தவர் ”பன்னாடு தந்த மாறன் வழுதி ”.
· இதில் நானூறு பாடல்கள் உள்ளன.
· பாடினோர் இருநூற்றெழுபத்தைவர்.