அறிமுகம்
நம் அன்றாட வாழ்க்கையில் சட்டம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை சட்டம் நம்மை வழிநடத்துகிறது. ஒரு குடிமகன் தன் உரிமைகளையும் கடமைகளையும் அறிந்து வாழ்வதே நாடு முன்னேற வழி.
அடிப்படை உரிமைகள்
இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் வழங்குகிறது. சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, மத சுதந்திரம், கல்வி உரிமை போன்றவை முக்கியமான அடிப்படை உரிமைகள். சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
நுகர்வோர் உரிமைகள்
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 வாடிக்கையாளர்களின் உரிமைகளை பாதுகாக்கிறது. தவறான எடை, தரமற்ற பொருட்கள் விற்பனை செய்தால் நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யலாம். ISI மற்றும் BIS தரச்சான்றிதழ் பொருட்களை வாங்குவது பாதுகாப்பானது.
சாலை விதிகள்
சாலையில் வாகனம் ஓட்ட உரிமம் கட்டாயம். தலைக்கவசம் அணிவது சட்டப்பூர்வக் கடமை. வேகவரம்பை மீறுவதும், குடிபோதையில் ஓட்டுவதும் தண்டனைக்குரிய குற்றங்கள்.
சட்டவிழிப்புணர்வின் முக்கியத்துவம்
சட்டத்தை அறியாமை ஒரு கட்டத்தில் தண்டனைக்கு வழிவகுக்கலாம். ஆகவே ஒவ்வொரு குடிமகனும் தன் உரிமைகளையும் கடமைகளையும் அறிந்திருக்க வேண்டும். சட்ட உதவி மையங்கள் இலவசமாக ஆலோசனை வழங்குகின்றன.