கம்பராமாயணம்
சொற்பொருள்:
· ஆயகாலை – அந்த நேரத்தில்
· அம்பி – படகு
· நாயகன் – தலைவன்
· நாமம் – பெயர்
· கல் – மலை
· திரள் – திரட்சி
· துடி – பறை
· அல் – இருள்
· சிருங்கிபேரம் – கங்கைகரையோர நகரம்
· திரை – அலை
· மருங்கு – பக்கம்
· நாவாய் – படகு
· நெடியவன் – இராமன்
· இறை – தலைவன்
· பண்ணவன் – இலக்குவன்
பரிவு – இரக்கம்
· குஞ்சி – தலைமுடி
· மேனி – உடல்
· மாதவர் – முனிவர்
· முறுவல் – புன்னகை
· விளம்பல் – கூறுதல்
· கார்குலாம் – மேகக்கூட்டம்
· பார்குலாம் – உலகம் முழுவதும்
· குரிசில் – தலைவன்
· இருத்தி – இருப்பாயாக
· நயனம் – கண்கள்
· இந்து – நிலவு
· நுதல் – நெற்றி
· கடிது – விரைவாக
· முரிதிரை – மடங்கிவிழும் அலை
· அமலன் – குற்றமற்றவன்
· இளவல் – தம்பி
இலக்கணக்குறிப்பு:
· போர்க்குகன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
· கல்திரள்தோள் – உவமைத்தொகை
· நீர்முகில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
· இருந்தவள்ளல் – பெயரெச்சம்
· வந்துஎய்தினான் – வினையெச்சம்
· கூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
· குறுகி, சேவிக்க – வினையெச்சம்
· கழல் – தானியாகுபெயர்
· அழைத்தி – முன்னிலை ஒருமை வினைமுற்று
· வருக – வியங்கோள் வினைமுற்று
· பணிந்து, வளைத்து, புதைத்து – வினையெச்சம்
· இருத்தி – முன்னிலை ஒருமை வினைமுற்று
· தேனும் மீனும் – எண்ணும்மை
· மாதவர் – உரிச்சொற்றொடர்
· அமைந்த காதல் – பெயரெச்சம்
· தழீஇய – சொல்லிசை அளபெடை
· கார்குலாம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
· உணர்த்துவான் – வினையாலணையும் பெயர்
· தீராக் காதலன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
· மலர்ந்த கண்ணன் – பெயரெச்சம்
· இனிய நண்ப – குறிப்புப் பெயரெச்சம்
· நெடுநாவாய் – பண்புத்தொகை
· தாமரை நயனம் – உவமைத்தொகை
· நனிகடிது – உரிச்சொற்றொடர்
· நெடுநீர் – பண்புத்தொகை
· என்னுயிர் – ஆறாம் வேற்றுமைத்தொகை
· நன்னுதல் – பண்புத்தொகை
· நின்கேள் – நான்காம் வேற்றுமைத்தொகை
ஆசிரியர் குறிப்பு:
· கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார்.
· இவ்வூர், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
· கம்பரின் தந்தையர் ஆதித்தன்.
· கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
· இவரைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ஆதரித்தவர்.
· காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
· தம்மை ஆதரித்த வள்ளல் சடயப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
· கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய கம்பர் இயற்றிய நூல்கள்.
· சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்.
· கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியவர் கம்பர் என்னும் தொடர்கள் கம்பரின் பெருமையை அறியலாம்.
· “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் ” என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
நூல்குறிப்பு:
· வான்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் அதனைத் தமிழில் இயற்றினார்.
· கம்பர் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம் எனப்பட்டது.
· கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.
· கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.
· காண்டம் என்பது பெரும்பிரிவையும் படலம் என்பது அதன் உட்பிரிவையும் குறிக்கும்.
· இந்நூலின் சிறப்புக் கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் ”தமிழுக்கு கதி ” என்பர்.
· குகப்படலம் அயோத்தியா காண்டத்தில் ஏழாவது படலம் ஆகும். இதனை கங்கைப் படலம் எனவும் கூறுவர்.