தமிழ் வளர்ச்சி
|
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும் தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும் இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும் எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர். - பாரதிதாசன் |
சொற்பொருள்:
· தெளிவுறுத்தும் – விளக்கமாய் காட்டும்
· சுவடி – நூல்
· எளிமை – வறுமை
· நாணிடவும் – வெட்கப்படவும்
· தகத்தகாய – ஒளிமிகுந்த
· சாய்க்காமை – அழிக்காமை
· தாபிப்போம் – நிலைநிறுத்துவோம்
இலக்கணக்குறிப்பு:
· புதிது புதிது, சொல்லிச் சொல்லி – அடுக்குத்தொடர்
· செந்தமிழ் – பண்புத்தொகை
· சலசல – இரட்டைக்கிளவி
பிரித்தறிதல்:
· வெளியுலகில் - வெளி + உலகில்
· செந்தமிழ் - செம்மை + தமிழ்
· ஊரறியும் - ஊர் + அறியும்
· எவ்விடம் - எ - இடம்
ஆசிரியர் குறிப்பு:
· பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
· இவர் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் 29ஆம் நால் புதுவையில் பிறந்தார்.
· தந்தை கனகசபை, தாய் இலக்குமி.
· இவர் பாவேந்தர், புரட்சிக்கவிஞர் எனச் சிறப்பிக்கபடுவார்.
குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலியன இவர்தம் படைப்புகள்.