சிலப்பதிகாரம்
சொற்பொருள்:
· கொற்கை – பாண்டிய நாட்டின் துறைமுகம்
· தென்னம் பொருப்பு – தென்பகுதியில் உள்ள பொதிகைமலை
· பலியோடு படரா – மறநெறியில் செல்லாத
· பசுந்துணி – பசிய துண்டம்
· தடக்கை – நீண்ட கைகள்
· அறுவற்கு இளைய நங்கை – பிடாரி
· கானகம் – காடு
· உகந்த – விரும்பிய
· தாருகன் – அரக்கன்
· செற்றம் – கறுவு
· தேரா – ஆராயாத
· புள் – பறவை
· புன்கண் – துன்பம்
· ஆழி – தேர்ச்சக்கரம்
· படரா – செல்லாத
· வாய்முதல் – உதடு
இலக்கணக்குறிப்பு:
· மடக்கொடி – அன்மொழித்தொகை
· தேரா மன்னா, ஏகாச் சிறப்பின் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
· தடக்கை – உரிச்சொற்றொடர்
· புன்கண், பெரும்பெயர், அரும்பெறல் – பண்புத்தொகை
· உகுநீர், சூழ்கழல், செய்கொல்லன் – வினைத்தொகை
· அவ்வூர் – சேய்மைச்சுட்டு
· வாழ்தல் – தொழிற்பெயர்
· என்கால் என்பெயர், நின்னகர், என்பதி – ஆறாம் வேற்றுமைத்தொகை
· புகுந்து – வினையெச்சம்
· தாழ்ந்த, தளர்ந்த – பெயரெச்சம்
· வருக, தருக, கொடுக – வியங்கோள் வினைமுற்று
பிரித்தறிதல்:
· எள்ளறு - எள் + அறு
· புள்ளுறு - புள் + உறு
· அரும்பெறல் - அருமை + பெறல்
· பெரும்பெயர் - பெருமை + பெயர்
· அவ்வூர் - அ + ஊர்
· பெருங்குடி - பெருமை + குடி
· புகுந்தீங்கு - புகுந்து + ஈங்கு
· பெண்ணணங்கு - பெண் + அணங்கு
· நற்றிறம் - நன்மை + திறம்
· காற்சிலம்பு - கால் + சிலம்பு
· செங்கோல் - செம்மை + கோல்ஆசிரியர் குறிப்பு;
· இளங்கோவடிகள் சேரமரபினர்.
· பெற்றோர் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சோனை.
· தமையன் - சேரன் செங்குட்டுவன்
· இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் சென்று தங்கினார்.
· சமய வேறுபாடற்ற துறவி.
· பாரதியார் இவரை, ”யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை ” என்றார்.
நூல் குறிப்பு:
· சிலம்பு + அதிகாரம் - சிலப்பதிகாரம்
· கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.
· இக்காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
· புகார்க்காண்டம் - 10 காதை
· மதுரைக்காண்டம் - 13 காதை
· வஞ்சிக்காண்டம் - 7 காதை
· இக்காப்பியம் ”உரையிடை இட்ட பாட்டைச்செய்யுள் ” என அழைக்கப்படுகிறது.
· முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைக் போற்றிப் புகழ்வார்.
· “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு ” எனப் பாரதியார் புகழ்கிறார்.
· வழக்குரைக் காதை மதுரைக்கான்டத்தின் பத்தாவது காதை.
· “இசை நாடகமே ” சிலப்பதிகாரக் கதையின் உருவம்.
நூலெழுந்த வரலாறு:
· சேரன் செங்குட்டுவன், சீத்தலைச்சாத்தனாரோடும் இளங்கோவடிகளோடும் மலைவளம் காணச் சென்றான்.
· அங்கிருந்த மலைவாழ் மக்கள், ”வேங்கை மரத்தின்கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தோம் ” என்று கூற, உடனிருந்த பெரும்புலவர் சாத்தனார், ‘அப்பெண்ணின் வரலாற்றை யானறிவேன் ” என்று கோவலன் கண்ணகி வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார்.
· அதனைக் கேட்ட இளங்கோவடிகள், ”இக்கதையைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் யாம் இயற்றுவோம் ” ஏறனு கூறினார்.
· சாத்தனாரும், ”அடிகள் நீரே அருளுக ” என்றார்.
நூற்கூறும் உண்மை:
· அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
· உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
· ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்